Categories: Cinema News latest news throwback stories

சிவாஜியின் அசாத்திய நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்!.. ஆனால் நடிச்சது சிவாஜியே இல்ல..

தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாக வாய்க்கப் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே இன்றைய தலைமுறையினருக்கு ஒரு காப்பியமாகவே கருதப்படுகிறது. தான் சினிமாவில் எப்படி சாதிக்க வேண்டும் என்பதற்கு சிவாஜியின் படங்களை பார்த்து வந்தாலே போதும்.

sivaji1

அந்த அளவுக்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் உருவம் கொடுத்திருக்கிறார் சிவாஜி கணேசன். அந்த வகையில் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரில்லர் படம் ‘அந்த நாள்’. அந்த நாளிலேயே இப்படி ஒரு படமான என்ற வியப்பை ஏற்படுத்தியது ‘அந்த நாள்’ திரைப்படம்.

இத்திரைப்படம் அகிர குரோசவாவின் “ரசோமன்” என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு ஜாவர் சீதாராமன் கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்கியர் எஸ்.பாலசந்தர். மெய்யப்பச்செட்டியார் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

jawar seetharaman

ஜப்பானில் அகிர குரோசவாவின் “ரசோமன்” படத்தை பார்த்த மெய்யப்பச்செட்டியார் படம் மிகவும் பிடித்துப் போக எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க பாலசந்தரும் அந்த உரிமையை வாங்கினார். ஆனால் படத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன் என்ற ஒரு நடிகர்.

அவரை வைத்து ஏறக்குறைய 7000 அடி வரை படத்தை எடுத்து போட்டுப் பார்த்த மெய்யப்பச்செட்டியாருக்கு அந்த கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதன்பிறகே சிவாஜியை அந்த நாள் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

kolkatta vishwanathan

அந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. சிவாஜியின் கதாபாத்திரத்தை முதலிலேயே கொலை செய்வது போல காட்டிவிடுவார்கள். அவரை கொலை செய்ததது அவரின் மனைவியா, நண்பர்களா அல்லது அக்கம் பக்கத்தினரா என்ற பாணியில் துப்பறியும் நோக்கில் படம் நகர்ந்து போகும்.

இதையும் படிங்க : அமெரிக்க பிரசிடெண்டுக்கே ஜோசியம் சொன்ன தமிழ் நடிகர்!.. ஆனா நடந்தது தான் பயங்கரம்..

Published by
Rohini