கொட்டுக்காளி படம் மட்டும் ஓடட்டும்!.. கண்டிப்பா இதை செய்வேன்!.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!...

 
கொட்டுக்காளி படம் மட்டும் ஓடட்டும்!.. கண்டிப்பா இதை செய்வேன்!.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!...
Kottukkaali: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நுழைந்தார். துவக்கத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். . ரஜினி முருகன் போன்ற சில படங்கள் அவரை ஸ்டார் நடிகராக மாற்றியது. ஒருபக்கம், சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான சில படங்களை அவரே தயாரித்தார். அப்படி சில படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தால் 100 கோடி வரை கடனாளியாக மாறினார். அதன்பின் அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போதெல்லாம் பஞ்சாயத்து நடக்கும். கடனை தான் ஏற்பதாக கையெழுத்து போடுவார் சிவகார்த்திகேயன். ஒரு தயாரிப்பாளுக்கு கால்ஷீட் கொடுப்பதாக சொல்லி அவரிடம் அட்வான்ஸ் வாங்கி அந்த பிரச்சனை தீர்த்து பின் அந்த படம் வெளியாகும். அதேபோல், சம்பளத்தில் சில கோடிகளை விட்டு கொடுப்பார். கொட்டுக்காளி படம் மட்டும் ஓடட்டும்!.. கண்டிப்பா இதை செய்வேன்!.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!... மேலும், அயலான் போன்ற சில படங்களில் சம்பளம் வாங்காமலே நடித்தார். ஒருவழியாக கடனிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். சூரிக்கு திரையுலகில் மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. படங்களில் வாடா போடா என அழைத்துக்கொண்டாலும் நிஜத்தில் அண்ணன் - தம்பியாக இருவரும் பழகி வருகிறார்கள். இந்நிலையில்தான் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை வினோத் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படம் பல வெளிநாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றிருக்கிறது. கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியானது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி படம் ஹிட் அடித்து என் முதலீட்டை விட லாபம் வந்தால் அதை இயக்குனர் வினோத்துக்கு அடுத்த படத்திற்கான முன் பணமாக கொடுப்பேன். அதிகமான லாபம் வந்தால் வினோத் போன்ற 2 இயக்குனர்களுக்கு முன் பணமாக கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறு உதவி இது’ என அவர் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

From Around the web