குடிமக்களை குடிகாரர்களாக்கியது போதும்.. டாஸ்மாக்கை மூடுங்கள்- வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் பேட்டி

 
குடிமக்களை குடிகாரர்களாக்கியது போதும்.. டாஸ்மாக்கை மூடுங்கள்- வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் பேட்டி

தற்போதைய தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வரும் நிலையில் , தனது ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்திய மூத்த நடிகர் சிவக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

குடி மக்களை குடிகார மக்களாக்கியது போதும். இனி புதிதாக யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதுதான். கிட்டதட்ட 40% வ்மக்கள் குடிக்கு அடிமையாக உள்ளனர். மேலும் மதுபான கடைகளை கலைஞர் தொடங்கியதில் காலத்திலிருந்து நான் அதற்கு எதிரானவன். இதை செய்வார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், செய்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

அரசியலுக்கு வருபவர்கள் தங்கள் குடும்பத்தின் சொத்துக்களை மட்டும் கோடி கோடியாகக் குவிப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது. அதை விடுத்து, சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலான உன்னதப் பணிகளைச் செய்ய வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இலவசத் திட்டங்களும் கட்டாயம் வேண்டும்,என்று அவர் வலியுறுத்தினார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் இலவசங்களும் தற்போதைய சூழலில் தேவை என்றும் கூறினார்.

From Around the web