1. Home
  2. Latest News

இதனால்தான் சூர்யாவுக்கு சரவணன் என பெயர் வைத்தேன்!.. சிவக்குமார் கண்ணீர்!...

suriya

சூர்யா

தமிழ் திரையுலகில் கருப்பு வெள்ளை காலம் முதலே திரைப்படங்களை தயாரித்து வந்தது ஏவிஎம் நிறுவனம். மெய்யப்ப செட்டியாருக்கு பின் அவரின் மகன் சரவணன் ஏவிஎம் நிறுவனத்தை நடத்தி வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினியை வைத்து சிவாஜி படத்தை தயாரித்த பின் அந்நிறுவனம் பெரிய அளவில் தயாரிப்பு பணியில் ஈடுபடவிலை.

இந்நிலையில்தான், ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார் அவரில் அவரின் உடல் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் நடிகர்கள் சிவக்குமார் சூர்யா ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

சிவக்குமாரும் சூர்யாவும் கண்ணீர் மல்க சரவணனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஏனெனில் இருவருமே ஏவிஎம் தயாரிப்பில் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை வைத்து அயன் என்கிற திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. எனவேதான் அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய சிவக்குமார் ‘என்னுடைய உண்மையான பெயர் பழனிச்சாமி. ஏவிஎம் சரவணன்தான் அதை சிவக்குமார் என மாற்றினார். அதனால்தான் என் மகன் சூர்யாவுக்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். சரவணன் சாரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு’ என்று அவர் பேசியிருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.