
Cinema News
எவரா இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் எல்லாரையுமே திருப்திப்படுத்த முடியாது….சொல்கிறார் சூரி
Published on
புரோட்டா சூரி என்றதுமே நம் நினைவுக்கு வருவது 50 புரோட்டாவை அசால்டாக சாப்பிடும் சூரி தான். நகைச்சுவையை இவர் இயல்பாகப் பேசியேக் கொண்டு வந்து விடுவார். அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் இருக்காது. அது சரி….சூரி எப்படி சினிமாவுக்குள் வந்தார்னு பார்ப்போமா….இதுபற்றி அவரே என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
1996ல் சினிமாவுக்கு வந்தேன். ஜெரால்டு… மந்திரவாசல்னு ஒரு சீரியல். சில்ட்ரன் கேரக்டர்ல நடிச்சேன். கோபிசெட்டிப்பாளையம். அதுவும் எலக்ட்ரீசியனா வேலை பார்த்தேன்.
அந்த வேலை பார்த்துக்கிட்டே அந்த சீன வாங்கி நடிச்சேன். அப்புறம் கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் திருமதி செல்வம். குமரன் டைரக்டர். எனக்கு ரோல் மாடல்னா எங்க அப்பா தான்.
அப்பா மிகப்பெரிய காமெடி சென்ஸ் உள்ள ஆளு. மிகப்பெரிய நகைச்சுவை. ஊர்ல எல்லாருமே சொல்வாங்க. அதை மிஸ் பண்ணிட்டோம் நாங்க. அப்பாவைப் பத்தி யாரு வேணும்னாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க.
soori
பஸ்ல ஏறினம்னா 4 பேரு சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க. செக்கிங் வரும்போது மாட்டிக்குவாங்க. முத்துச்சாமியோட காமெடியைப் பார்த்துக்கிட்டே வந்தேன். டிக்கெட் எடுக்கலம்பாங்க.
இந்த ஜ போட்டு பேசறது…ஜந்தோஷம்….என எல்லாம் அப்பாக்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான். வடிவேலு சார் கூட காம்பினேஷன்ல படம் பண்ணனும்கற ஆசை இருந்துச்சு. புஷ்பா புருஷன யாரும் அவ்வளவு சீக்கிரத்துல மறக்க மாட்டாங்க. வின்னர் படத்துல வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரும். அப்போ நான் டெக்னீஷியன். உள்ளே ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
soori, sivakarthikeyan
அங்க எலக்ட்ரீஷியனா வேலை செஞ்சோம். அப்படித் தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. எல்லாருமே வண்டியை எடுத்து ஓட்டும்போது ரைட் லெப்ட் போகத் தான் செய்யும். அதுக்கு பிறகு சரியா வரும். ஓவர் ஆக்டிங் இருக்காது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல கிடைக்காத வாய்ப்பு இப்போ தம்பியோட தலைமையில கிடைச்சிருக்கு..
மிகப்பெரிய ஹியூமர்சென்ஸ் உள்ள ஆளு தம்பி கார்த்தி…ரெண்டு பேருக்கும் காமெடி சென்ஸ் இருந்தா எப்படி இருப்பாங்க. அதனால ரெண்டு பேருக்கும் நாம என்ன அங்க போட்டாலும் பதிலு வந்துரும். ரெண்டு பக்கமும் போட்டா வார் தான் நடக்கும்.
இருந்தாலும் மக்கள் மத்தியில அந்த காம்பினேஷன் னதுமே ஒரு பயங்கரமான எனர்ஜியா ஆயிடுறாங்க. அந்த சங்கத்துல உறுப்பினர் போஸ்ட் கூட கிடைக்கல. இந்த சங்கத்துல செயலாளராவே உட்கார்ந்தாச்சு. விமர்சனங்கள் சொல்றதை இலை மறை காயா சொல்லலாம். டப்புன்னு சொல்லிடுறாங்க.
எவரா இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் எல்லாரையுமே திருப்திப்படுத்த முடியாதுல. திருப்திப்படுத்தணும்னு நினைக்கிற நேரத்துல திருப்தி கம்மியா இருக்கலாம்.
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...