Categories: Cinema News latest news

‘கருடன்’ வெற்றியால் சூரிக்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா? மாஸ் காட்டிய தயாரிப்பாளர்

Actor Soori: தமிழ் சினிமாவில் தற்போது சூரி ஒரு பெரிய ஹீரோவாக பிரதிபலித்து வருகிறார் .ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றவர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. அதில் பரோட்டா சாப்பிடும் காட்சிகளில் நடித்து பரோட்டா சூரி என்றும் அழைக்கப்பட்டார்.

அதிலிருந்து அவர் நடித்த எல்லா படங்களிலும் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையால் மக்களை வெகுவாக கவர்ந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் சேர்ந்த நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல படங்கள் அவருடைய நகைச்சுவைக்கு தீனி போட்ட படங்களாக அமைந்தன. அதனால் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் சூரி.

இதையும் படிங்க: நோகாம நடிச்சு 250 கோடியை சுருட்டிட்டு போகவா? ‘கூலி’ படத்தில் ரஜினிக்காக லோகேஷ் போட்ட ப்ளான்

தொடர்ந்து சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார். இந்த நிலையில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தில் அவரை ஹீரோவாக மாற்றினார். அந்த படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. பெரிய அளவு வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடிக்க பல ஆபர்கள் வந்தன.

அதை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக தன்னை நிலைநாட்டிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வசூல் சாதனை படைத்தது .இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கருடன் திரைப்படத்தின் வசூல் 50 கோடி என்று சொல்லப்படுகிறது .

இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

இந்த நிலையில் சூரிக்கு சம்பளமாக 2.5 கோடி அட்வான்ஸ் தொகை மட்டும் கொடுத்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் .கருடன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு கிப்டை பரிசளித்திருக்கிறாராம். அது பி எம் டபிள்யு காரில் எக்ஸ் 7 என்ற மாடலில் அமைந்த கார் ஒன்றை பரிசளித்திருக்கிறாராம் தயாரிப்பாளர். கருடன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகும் சூரி இனிமேல் கதையின் நாயகனாகத்தான் நான் நடிப்பேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini