×

ரஜினியா?.. வெற்றிமாறனா?.. சூரிக்கு இப்படி ஒரு சோதனையா?...

 

நடிகர் சூரி ரஜினி நடிக்கும் அண்ணாத்தே படத்தில் நடிக்க இந்த வருட துவக்கத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்திற்காக தாடி வளர்த்திருந்தார். ஆனால், கொரொனா  பீதி காரணமாக மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே, கடந்த 8 மாதங்களாக தாடியுடன் காத்திருந்தார். 

இதற்கிடையில், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. எனவே, எப்படியும் அண்ணாத்தே படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆகும் என நினைத்து தாடியை வளித்து விட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாமலை படப்பிடிப்பு துவங்கிவிட்டது. எனவே, தாடியில்லாமல் எப்படி நடிப்பது என்கிற பிரச்சனை சூரிக்கு ஏற்பட்டுள்ளதாம். 

படப்பிடிப்புக்கு சென்று 2 நாள் இருந்துவிட்டு உடனே திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது தாடியை வளர்த்து அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்வதா, இல்லை வெற்றிமாறன் படத்தில் நடிப்பதாக என தவித்து வருகிறாராம் சூரி..

என்னடா!.. சூரிக்கு வந்த சோதனை!...
 

From around the web

Trending Videos

Tamilnadu News