×

நடிகர் சூரியிடம் ரூ. 2 கோடி மோசடி - தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு!

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி

 

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான காமெடி நடிகர்களுள் ஒருவரான சூரி தனது யதார்த்தமான நடிப்பினால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் சூரிக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் ரூ.  2 கோடியே 70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி சம்மந்தப்பட்ட நபர் மீது சூரி வழக்கு பதிவு செய்துள்ளார். தயாரிப்பாளரை தவிர இந்த மோசடியில் மேலும் சிலர் இருப்பதாக சந்திக்கப்படுவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News