தமிழ் சினிமாவில் நல்ல காமெடியனாக வலம் வரும் நடிகர் சூரி, கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் சூட்டிங் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படமாக தொடங்கப்பட்டு, தற்போது இரண்டு பாகங்களாக வெளியாகும் என கூறப்படும் அளவிற்கு பெரிதாகி விட்டது. இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.
அதற்கான ஷூட்டிங் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூரி போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அதற்காக அவ்வப்போது உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடலை கட்டுமஸ்தானாக மாற்றியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் வாங்கினால் விஜய் தருகிறோம்.! தளபதி மனசுல என்ன இருக்குனு தெரியாம பேசுறீங்களே.?!
அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டு பகுதியில் இரண்டு கல்லை வைத்து தண்டால் எடுக்கும் செய்யும் போட்டோவை வெளியிட்டு, விடுதலை சூட்டிங் ஸ்பாட் என பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விவேகம் படத்தில் அஜித் காட்டுக்குள் அங்குள்ள மரங்கள், கட்டைகள் மூலம் உடற்பயிற்சி செய்வது போல இந்த காட்டுப்பகுதியில் கற்களை வைத்து உடற்பயிற்சி செய்கிறார் சூரி என்று சிலாகித்து வருகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…