
Cinema News
Srikanth: ரன் படம் தொடங்கி பிச்சைக்காரன் வரை… ஸ்ரீகாந்த் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்கள்… அட இத்தனையா?!…
Published on
By
Srikanth: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர் ஸ்ரீகாந்த். கே பாலச்சந்தர் இயக்கிய ஜன்னல் மரபுக் கவிதை என்ற சீரியல் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சசி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபவன் கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள் அனைத்துமே இவரது கெரியரில் மிகச்சிறந்த படமாக அமைந்தது.
இதையும் படிங்க: Samantha: லிப்லாக் சீனில் சம்பவம் செஞ்ச சமந்தா… OTT-யில் பட்டையைக் கிளப்பும் சிட்டாடல்..!
பார்த்திபன் கனவு படத்தில் நடித்ததற்கு ஸ்ரீகாந்துக்கு தமிழக அரசு சார்பாக சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்விதான். கடைசியாக சசி இயக்கிய பூ என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார். நண்பன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளான நிலையில் ஒரு வெற்றிப் படம் கூட அவர் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ஸ்ரீகாந்த் தான் சினிமாவில் தவறவிட்ட படங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது நான் முதலில் அறிமுகமாக இருந்த திரைப்படம் 12பி தான்.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் ஷாமுக்கு சென்று விட்டது அதைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் ரன் பட வாய்ப்பை நான் மிஸ் பண்ணிவிட்டேன். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் நடித்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தை தான் மறுத்து விட்டேன்.
Srikanth
பின்னர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்திலும், சசியின் பிச்சைக்காரன் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தும் நழுவ விட்டுவிட்டேன். மேலும் சன் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் கடைசியில் அதிலும் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார் ஸ்ரீகாந்த்.
இவர் தவறவிட்ட திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். இந்த படங்களில் எல்லாம் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தால் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பார். இன்றும் தமிழ் சினிமாவில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஆனால் எந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர்களின் லிஸ்டில் இவரும் இருக்கின்றார் என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: ரஜினி, கமல் சேர்ந்து இத்தனை படம் ஒன்னா நடிச்சிருக்காங்களா?!… இதுல இவ்வளவு ஹிட்டு படங்களா?..!
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...