நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா!.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சூர்யா!..
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் இவர். இவரின் தம்பி கார்த்தியும் நடிகராக இருக்கிறார். இருவருமே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சூர்யா, கார்த்தி இருவருமே தொடக்கம் முதலே சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடித்து வருகிறார்கள்.
அவ்வப்போது அவர்கள் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதுண்டு. அதனால்தான், அவர்களுக்கு என்ன சம்பளம் என்பது வெளியே தெரியாது. இந்நிலையில்தான் நடிகர் சூர்யா தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தியேட்டர்கள் மூலமாக கிடைக்கும் வசூலில் எவ்வளவு பங்கு கிடைக்கிறதோ அதையே நடிகர்கள் தங்களின் சம்பளமாக நிர்ணயிக்கிறார்கள். விஜயும் அதைத்தான் பின்பற்றினார்.
சிவகார்த்திகேயனின் சம்பளம் 50 முதல் 60 கோடி உயர்ந்ததற்கு கூட அதுதான் காரணம். அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் தமிழகத்தில் 200 கோடி வசூல் செய்தது. அதில் 100 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. எனவே அதையே தனது சம்பளமாக சூர்யா முடிவு செய்துவிட்டாராம். அனேகமாக அடுத்தடுத்து சூர்யா நடிக்கும் படத்திற்கு அவர் 100 கோடி சம்பளம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
