Scene: ஓம் படத்தால் அப்செட் ஆன சூர்யா!.. எல்லாம் போச்சி!...
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான சீன் திரைப்படம் கடந்த தீபாவளி முன்னிட்டு கடந்த 6ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஏற்கனவே சூர்யாவுக்கு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் சீன் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து ஒரு வெற்றி படமாக மாறியது.
ஒரு காரணத்திற்காக தனது போலீஸ் வேலையை விடும் சூர்யா கண் பார்வை இல்லாத நிலையில் ஒரு மொக்கையான டீமை வைத்துக்கொண்டு ஒரு சைக்கோ கொலைகாரனை எப்படி பிடிக்கிறார் என்பதை சுவாரசியமான திரைகக்கதை மூலம் இயக்குனர் ஜித்து மாதவன் கூறியிருந்தால் படம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது..
படம் வெளியாகி இரண்டு வாரங்களில் சீன் திரைப்படம் 250 கோடி வசூல் செய்தது. தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சீன் படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமையான நேற்று தனுஷின் ஓம் திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்ததால் சுமார் 400 திரையரங்குகளில் சீன் படத்தை தூக்கி விட்டு ஓம் படத்தை திரையிட்டு விட்டார்களாம்.
இதனால் சூர்யா அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வரும் 60 திரையரங்குகளில் மட்டுமே சீன் படம் ஓடுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் சீன் திரைப்படமும் தனக்கு வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால் சூர்யா மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு அவர் வீடியோவையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
