Suriya50: 50வது படத்துக்கு மெகா ஸ்கெட்ச் போட்ட சூர்யா!.. மாஸ் அப்டேட் கம்மிங் சூன்!...

நடிகர் சூர்யாவுக்கு பல வருடங்களுக்குப் பின் கருப்பு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.
 
suriya

நடிகர் சூர்யாவுக்கு பல வருடங்களுக்குப் பின் கருப்பு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. இந்த படம் கிட்டத்தட்ட 325 கோடி வரை வசூல் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 46வது திரைப்படம் ஆகும். அடுத்து லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் சூர்யாவின் 47வது திரைப்படமாக வெளியாகியுள்ளது.

அதேபோல் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யாவின் 48 வது படமாக வெளியாகவுள்ளது. இந்த படம் முடியும் நிலையில் இருக்கிறது. சூர்யாவின் 49 வது திரைப்படத்தை ஏற்கனவே சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் ராஜா இயக்கவிருக்கிறார்.

சென்னையில் பிரபலமாக இருந்து சமீபத்தில் காலமான 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.  5 ரூபாய் டாக்டர் கதாபாத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், 49வது படம் முடிவாகிவிட்ட நிலையில் தனது 50வது படத்தை பற்றி இப்போதே சூர்யா யோசிக்க துவங்கி விட்டாராம். தெலுங்கில் சமீபத்தில் சிரஞ்சீவியை வைத்து ஹிட் கொடுத்த ரவி அணில் புடி சூர்யாவை வைத்து படம் இயக்கும் ஆசையில் இருக்கிறாராம்.

அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து போய் எல்லாம் சரியாக அமைந்தால் சூர்யாவின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க வாய்ப்பிருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் இந்த படத்தை சூர்யாவின் ழகரம் நிறுவனமே தயாரிக்குமா இல்லை வேறு தயாரிப்பாளரா என்பது அப்போதுதான் தெரிய வரும்.

Tags

From Around the web