குடும்ப கஷ்டம்!.. அதான் சினிமாவுக்கு வந்தேன்.. சூர்யா ஓப்பன்....

 
suriya

முதல் பட வாய்ப்பு: வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் இவர். நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித்தும் விஜயும் நடித்தனர். அஜித்தை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து அஜித் விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சூர்யா.

கை கொடுத்த பாலா: அவரின் நிஜமான பெயர் சரவணன். அவருக்கு சூர்யா என பெயர் மாற்றியவர் இயக்குனர் வசந்த். முதல் படத்தில் சூர்யாவுக்கு சரியாக நடிப்பு வரவில்லை. ஒரு வழியாக சமாளித்து நடத்தி சமாளித்தார். முதல் படத்திலேயே சிம்ரனுக்கு ஜோடி, சில பாடல் காட்சிகளும் அவருக்கு இருந்தது. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் ஒன்றும் எடுபடவில்லை. அதே நேரம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க, பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் சூர்யாவுக்கு முக்கிய படங்களாக அமைந்தது.

கருப்பு சூப்பர் ஹிட்: அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து தற்போது கோலிவுட்டின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக சூர்யா மாறியிருக்கிறார். இடையில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும் அவ்வப்போது வெற்றிகளை கொடுத்தது தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்கிறார். அவரின் கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் பெரிய வசூலை பெறாத நிலையில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பெற்று 340 கோடி வரை வசூல் செய்து விட்டது.

விஸ்வநாத் & சன்ஸ்: தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தொடர்பான பிரமோஷன்களில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார்.

குடும்ப கஷ்டம்: இந்நிலையில், அப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா நான் கேமராவுக்கு முன்பு நிற்கப்போவது ஷூட்டிங்கிற்கு 5 நாட்களுக்கு முன்புதான் தெரியும். எந்த பயிற்சியும் இல்லாமல் கேமரா முன்புதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் துவக்கத்தில் அம்மாவுக்காக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் ரசிகர்கள் வழங்கிய நிபந்தனையற்ற அன்பு இந்த தொழிலை ஒரு பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வைத்தது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Tags

From Around the web