Connect with us
surya

Cinema News

பேரழகன்’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம்! சிகரெட் பிடிப்பதையே நிறுத்திய சூர்யா.. என்னவா இருக்கும்?

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் சூர்யா. ஆரம்ப காலங்களில் இவரும் சினிமாவிற்காக ஏராளமான போராட்டங்களை சந்தித்து விட்டு தான் வந்திருக்கிறார். அதாவது இவருடைய அப்பா சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் நடிப்பை வரவழைப்பதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

மற்றபடி சினிமாவில் எளிதாக நுழைந்து விட்டார். டான்ஸ் தெரியாது. நடிக்க தெரியாது. ஒழுங்காக வசனங்கள் பேசத் தெரியாது. இதை எல்லாம் எப்படியாவது முறையாக கற்றுக்கொண்டு சினிமாவில் நாமும் ஒரு அந்தஸ்தான நடிகராக வேண்டும் என்பதற்கு பல முயற்சிகள் எடுத்து இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரதிபலித்து வருகிறார் சூர்யா .

இதையும் படிங்க: சூர்யா மீது செம கடுப்பில் சிறுத்தை சிவா?.. கங்குவாவுக்கு அதைக்கூட பண்ண மாட்றாரே என்கிற வருத்தம்!

தற்போது இவர் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணைந்து அவருடைய 44 வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமா நடிகர்கள் என்றாலே மது குடிப்பார்கள். புகை பிடிப்பார்கள் என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையாக இருக்கிறது.

உண்மையில் அவர்கள் என்னென்ன சாப்பிடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆசையில் ரசிகர் ஒருவர் இதைப் பற்றி சூர்யாவிடமே ஒரு தடவை கேட்டாராம். நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த சூர்யா நிஜ வாழ்விலும் சரி சினிமாவிலும் சரி சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன் என்று கூறியதோடு, பேரழகன் படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றியும் அந்த ரசிகருக்கு எடுத்துரைத்தாராம் சூர்யா.

இதையும் படிங்க: அக்கட தேசத்துக்கு மட்டும் பறந்த வாழ்த்து! இதுவும் விஜயோட சேஃப் கேம்தானா? அரசியலுக்கு இது செட்டாகுமா?

அதாவது பேரழகன் படத்தில் ஒரு புகை பிடிக்கும் காட்சி இருந்ததாம். அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சரவணன் சூர்யாவை அழைத்து  ‘சூர்யா உங்களுக்கு என ஒரு தனி பேன் பாலோவ்ஸ் இருக்கிறார்கள். நீங்கள் இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது அவர்களும் இதை பின்பற்றினால் உங்களுக்குத்தான் அது கெட்ட பெயராக இருக்கும்.

அதனால் இதை தவிர்த்து விடலாமே’ என கூறினாராம். சரவணன் சொன்னது சூர்யாவுக்கும் நல்லது எனப்பட உடனே அந்த படத்தில் இருந்து அந்த காட்சியை நீக்கிவிட சொன்னாராம் சூர்யா. அதுமட்டுமல்லாமல் இனிவரும் படங்களிலும் நான் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என சரவணனிடம் கூறி இன்று வரை இந்த மாதிரி காட்சிகளில் சூர்யா நடிக்கவே இல்லை என்பது தான் உண்மை.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்!.. இந்த தங்கத்தை தகரம்னு விட்டுட்டீங்களேடா!..

Continue Reading

More in Cinema News

To Top