×

தமிழக அரசுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா!

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த முடிவை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார் 

 

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த முடிவை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார் 

இந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக அகரம் என்ற கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யா, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்த கூடாது என்று பலமுறை கூறியுள்ளார்

இந்த நிலையில் இன்று ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் நடிகர் சூர்யா நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News