×

கைது செய்யும் நேரத்தில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி தலைமறைவு!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும்,  ரியா ஒரு சில நபர்களுடன்  சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

சுஷாந்திற்கு மன அழுத்தமே இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார்.  இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்து சுஷாந்தின் தந்தை புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ரியா மீது வழக்கு பதிவு செய்தா பாட்னா போலீசார் ரியாவை கைது செய்ய மும்பையில் உள்ள அவரது  வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால், அவரை அங்கு காணாததால் ரியா தலைமறைவாகியிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News