
Cinema News
Vijay TVK: விஜய் அங்கிள் இப்படி பேசியிருக்க கூடாது! நிறுத்துங்க அங்கிள்.. எஸ்.வி. சேகர் காட்டம்
Vijay TVK: நேற்று நடந்த மாநில மாநாட்டில் திமுக, பாஜக என எல்லா கட்சிகளையும் விமர்சித்து விஜய் பேசி இருந்தார். இதைப் பற்றி பிரபல நடிகர் எஸ்வி சேகர் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். விஜய் கேரவனை விட்டு இப்பொழுதுதான் இறங்கி இருக்கிறார். உலகம் ரொம்ப பெருசு. ராக்கெட் போறவங்க எல்லாம் சந்திரனில் இறங்கினால் முதல் காலை வைத்து விட்டு அடுத்த காலை வைக்கலாமா வேண்டாமா என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் பண்ணுவார்கள்.
அந்த மாதிரி இவர் எதுவுமே தெரியாமல் இறங்கி விட்டார். சினிமா மாதிரி அரசியலும் இருக்கும் என நினைத்து விட்டார் போல. பாண்டிச்சேரியில் ஒரு நாலு தெருவில் எம்எல்ஏவாக நின்னு ஜெயித்தார் புஸ்ஸீ ஆனந்த். அவர் பேச்சைக் கேட்டு இந்த அளவுக்கு விஜய் செய்கிறா.ர் புஸ்ஸீஆனந்த் வணக்கம் என சொல்லுகிறாரா மாலை வணக்கம்னு சொல்லுகிறாரா என்றே தெரியவில்லை.
தமிழ்ல பேசுற மாதிரியே தெரியல. எனக்கு தெரிந்த வரைக்கும் விஜய் அங்கிள் இப்படி பேசியிருக்கக் கூடாது. அவர் ஸ்டாலினை அங்கிள் என சொல்கிறார். நான் விஜயை அங்கிள் என குறிப்பிடுகிறேன். இதில் எந்த ஒரு தவறும் இல்லை. அங்கிள் என்பது கெட்ட வார்த்தை கிடையாது. அதனால் நான் விஜய் அங்கிள் என சொல்லிட்டு போகிறேன். இதனால் விஜய் அரை டிராயர் போட்ட பையனா மாறிடுவாரா.
விஜய்க்கு பையன் இருக்கிறார். நாளைக்கு அவர் வளர்ந்து திருமணம் ஆகி அவருக்கு ஒரு குழந்தை வந்தால் விஜய் தாத்தாவாகி விடுவார். இந்த காமெடி பேச்சு எல்லாம் சினிமாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கூட்டம் ஓட்டு ஆகாது என காமராஜர் காலத்திலேயே நிரூபணமான ஒரு விஷயம். அதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் புரிந்து கொள்ளவில்லை .
அங்கு வந்த சில பசங்களோட பேட்டிகளில் பார்க்கும் பொழுது பவன் கல்யாண் என்னுடைய ரசிகர் என கூறுகிறான். இது என்ன என்பதே புரியவில்லை. அரசியலை கேவலமாக்க கூடிய ஒரு முயற்சியில தான் இந்த கட்சி இருக்கிறது. சினிமா வேற அரசியல் வேற என்பதை அவர் மே மாதம் புரிந்து கொள்வார். அதுவரைக்கும் அவருக்கு நுரை தப்பிடும் .இதுதான் அவருக்கு முதல் முறை .
எந்த ஒரு போட்டியும் இல்லாமல் ராம்ப் வாக் எல்லாம் அவரே செய்து பண்ணிக் கொண்டிருக்கிறார். கோயம்புத்தூரில் வருடம் தோறும் ஈஷாவில் கூட்டம் கூடும். ஜக்கி வாசுதேவ் உடனே முதலமைச்சராகி விட முடியுமா. அப்படித்தான் கூட்டம் கூடினால் முதலமைச்சராகிவிட முடியும் என்கிற கனவில்தான் இருக்கிறார் விஜய் .அது மே மாதம் தெரிந்துவிடும் என எஸ் வி சேகர் கூறியிருக்கிறார்.