Vijay TVK: அவருக்கு பிரஷர் கொடுக்கணும்னு நினைச்சா? விஜய்க்கு ஆதரவாக பேசிய தாடிபாலாஜி

 
Vijay TVK: அவருக்கு பிரஷர் கொடுக்கணும்னு நினைச்சா? விஜய்க்கு ஆதரவாக பேசிய தாடிபாலாஜி

தற்போது ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழை கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்தப் படத்தை மறுத்தணிக்கை செய்ய மறுத்துள்ளது. விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சென்சார் பிரச்சினை காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அது சம்பந்தமாக பட நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடியது.

அந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது .தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என பட நிறுவனம் கலந்து ஆலோசித்து ஒரு அறிக்கையை வெளியிடும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஏற்கனவே இன்று ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த நாளை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

விஜய்க்கு கடைசி படம் என்பதாலும் பொங்கல் வெளியீடு என்பதாலும் ஜனநாயகன் திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாட காத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் தான் இது. இருந்தாலும் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் படத்தின் ரிலீஸ் தேதியை பட நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் விஜய்க்கு ஆதரவாக அவருடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். விஜயின் நண்பனாக ரசிகனாக தொண்டனாக இது ஒரு பெரிய ஏமாற்றம்தான். ஆனால் ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் அது பொங்கல் செலிப்ரேஷன் தான். இதைவிட நிறைய பிரஷரை விஜய் பார்த்து விட்டார். இதுக்கு மேலும் அவருக்கு பிரஷர் கொடுக்கணும் என்று நினைத்தால் ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட், ப்ளாஸ்ட் தான் என தாடி பாலாஜி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதில் ஜன நாயகன் படத்தையும் தாண்டி அந்தப் படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், அவரை சார்ந்த குடும்பங்கள் என இவர்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவரவர் குடும்பத்திற்காக இரவு பகலாக டெக்னீசியன்கள் உழைத்திருக்கிறார்கள். அதன் மூலம் வரும் பணத்தை வைத்துதான் குடும்பங்களை கவனித்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தாலும் விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார். விஜய்னாலே வெற்றிதானே என தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

From Around the web