×

நடிகர் தீப்பெட்டி கணேசன் மருத்துவமனையில் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்....

 
நடிகர் தீப்பெட்டி கணேசன் மருத்துவமனையில் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்....

ரேணிகுண்டா படத்தில் அறிமுகாகி ரசிகர்களை கவர்ந்தவர் தீப்பெட்டி கணேசன். மதுரையை சேர்ந்த இவர் அப்படத்திலும் மதுரை ஸ்லாங்கில் பேசி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க வருக்கு வாய்ப்புகள் வந்தது. பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்று அவர் இன்று மரணமடைந்தார். இந்த தவலை இயக்குனர் சீனுராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும்,  தனக்கு அஜித், ராகவா லாரனஸ் போன்ற நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News