Categories: Cinema News latest news throwback stories

மதுபோதையில் படப்பிடிப்புக்கு வந்த தேங்காய் சீனிவாசன்! – எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தேங்காய் சீனிவாசன். பல கருப்பு வெள்ளை மற்றும் கலர் திரைப்படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

thengai

அதேபோல் அவருக்கு குடிப்பழக்கும் உண்டு. பல சமயங்களில் குடித்துவிட்டும் படப்பிடிப்புக்கு வருவார். அப்படி அதிர்ஷ்டம் அழைக்கிறது என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டியோவில் நடைபெற்றது. அப்போது அதே ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. ஒரு இடைவெளியில் ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு எம்.ஜி.ஆர் வந்துவிட்டார்.

அவரை பார்த்ததும் படத்தின் தயாரிப்பாளர் ஓடிவந்து வரவேற்றார். அப்போது குடித்துவிட்டு வந்திருந்த தேங்காய் சீனிவாசன் எம்.ஜி.ஆருக்கு பயந்து அவரின் கண்ணில் படாமல் இருக்க ஒரு இடத்தை தேடி தவித்துக்கொண்டிருந்தார். படத்தின் கதையை கேட்ட எம்.ஜி.ஆர் ‘குடிகாரன் வேஷத்துக்கு சரியான ஆளத்தான் நடிக்க வைக்கிறீங்க’ என கமெண்ட் அடித்துள்ளார். அதோடு, சீனு எங்கே என அவர் கேட்க அங்கிருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது சீனிவாசனின் இரண்டாவது மனைவி அவரை எம்.ஜி.ஆரிடம் இழுத்துவந்துவிட்டார்.

அப்போது அவரிடம் ‘என்ன சீனு.. இத விட வேண்டியதுதான!’ சொன்ன சொல்ல சீனிவாசனோ ‘எம்.ஜி.ஆரின் காலில் விழுந்துவிட்டு முடியலனே’ என்றாரம். அதற்கு எம்.ஜி.ஆர் ‘முயற்சி செய்தால் எதுவும் முடியும்’ என சொல்ல, அதற்கு சீனிவாசன் ‘அண்ணே தொட்டு தாலி கட்டிட்டேன்’ என சொல்ல, எம்.ஜி.ஆர் ‘அடப்பாவி நான் நீ தண்ணி அடிக்கிறதா சொன்னா.. நீ பொண்டாட்டியன்னு நினைச்சிட்டியா’ என சொல்லி கலகலவென சிரித்தாராம்.

Published by
சிவா