#image_title
Vijayakanth: தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ரஜினி, கமல் என்னும் இரு இமயங்களுக்கு நடுவில் அவளுக்கு இணையான ஆளுமை செய்தவர் விஜயகாந்த். குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயகாந்த் தான். நல்ல உயரம் தமிழ்நாட்டுக்கு உரிய நிறத்துடன் கணீர் வசன உச்சரிப்பு எனக்கு அனைத்தும் தென் மாவட்ட காரர்களின் சாயலில் இருந்ததால் விஜயகாந்தை கொண்டாட ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். விஜயகாந்தின் சண்டை காட்சிகளை பார்க்கவே ரசிர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். அப்படி ஒரிஜினாலிட்டியுடன் எந்தவித டூப்பும் பயன்படுத்தாமல் நடிப்பதில் திறமை வாய்ந்தவர் விஜயகாந்த். ஒரு முறை அவரிடம் சார் இது கொஞ்சம் ரிஸ்க்கான சண்டை காட்சி இதில் டுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னால் அதற்கு அவர் அவரும் ஒரு உயிர் தானே அதனால் நானே இதை செய்கிறேன் என்று துணிச்சலுடன் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்துக் கொடுப்பார்.
அப்படி நடித்து இதுவரை எந்தவித அடியும் எந்தவித துயர செய்தியும் விஜயகாந்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்தது இல்லை அவ்வளவு நேர்த்தியாக செய்வார். அதேபோல அவரின் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமபந்தி உணவு முறை வழங்கப்படும். மற்ற படப்பிடிப்பு தளங்களில் பொட்டலம் சாப்பாடு வழங்கப்பட்ட காலங்களில் இவருடைய திரைப்பட படபிடிப்பு நடைபெறும் இடங்களில் வாழை இலை விரித்து கறி விருந்து நடைபெறும். அப்படி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரையில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருந்து மக்களின் மனங்களில் நின்றார்.
அதனால் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் இமயங்கள் அரசியலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலிலும் மக்களுக்காக பாடுபட்டார். உதவி செய்வதில் விஜயகாந்த் நடிகர் எவருமில்லை. உதவி என்று ஓடி வந்தவருக்கும் உதவுவார் தேவைப்படுபவர்களுக்கும் ஓடி சென்று உதவக்கூடியவர். இப்படி இருக்க சூழ்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தார்.அவரின் இழப்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் குணச்சித்திர நடிகருமான தியாகு விஜயகாந்தின் இழப்பு எவ்வளவு வேதனை மிக்கது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதாவது,” என்னுடைய ஆருயிர் நண்பன் விஜயகாந்த். கொரோனா எல்லாரையும் படாதப்பாடு படுத்தி விட்டது. அதேபோல அந்த நேரத்தில் நடிகர் விவேக்கும் போய்ட்டான்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னை விட்டு ஒவ்வொருத்தராக இறக்கும் பொழுது எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது. என்னுடைய கால் எலும்பு முறிந்து விட்டது. என்னுடைய மகள் மருத்துவர் என்பதால் நான் தப்பித்தேன். அவள் எனக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். என்னுடைய நண்பன் விஜயகாந்த் போனதிலிருந்து என்னுடைய உடம்பு போச்சு”. என்று கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
Parasakthi: அமரன்…
STR49: வெற்றிமாறன்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…