நான் ஆளையே கொன்னுருப்பேன்!.. செம நடிகை!.. மகாராஜா சச்சனாவை புகழந்த டாம் ஹாங்க்ஸ்..

 
tom honks

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2024ம் வருடம் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சனா என்கிற சிறுமி நடித்திருந்தார்.

சச்சனாவை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து விட அவர்களை கண்டுபிடித்து சச்சனாவின் தந்தை விஜய் சேதுபதி எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
கதை சாதாரணமாக இருந்தாலும் அது சொல்லப்பட்ட விதம், படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்ததால் இந்த படம் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி சச்சனா இருவரின் நடிப்பையும் விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது சச்சனாவுக்கு கிடைத்தது..

இந்நிலையில்தான் மகாராஜா படத்தில் சச்சனா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டி பேசி இருக்கிறார். ‘அந்தப் பெண் என்ன ஒரு அற்புதமான நடிகை.. அந்த பெண்ணை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.. என்னால் அதை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த ஆளைக் கொன்றிருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5196 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web