TTF Vasan: அக்கா ‘கூமாப்பட்டி’ நல்லாருக்காரா? தொகுப்பாளினியிடம் கேட்டு பல்பு வாங்கிய TTF வாசன்
பிரபல யுடியூப்பரான TTF வாசன் நடிக்கும் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியிடம் தேவையில்லாத கேள்வியை கேட்டு பல்பு வாங்கியிருக்கிறார் TTF வாசன். தனது யுடியூப் சேனல் மூலமாக பைக் ரேஸில் சாகசம் செய்து பல ரசிகர்களை கவர்ந்தவர்தான் டிடிஎஃப் வாசன்.
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சேனல் மூலமாக அடுத்தடுத்து பல சாகசங்களை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டார். இந்த பிரபலத்தால் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் செல்லம் அ இயக்கும் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் TTF வாசன்.
ஆனால் அந்தப் படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்க டிடிஎஃப் வாசன் அந்தப் படத்தில் இருந்து விலகி கூல் சுரேஷ் அந்தப் படத்தின் ஹீரோவாக மாறினார். அதன் பிறகு போலீஸ் கேஸ், வாகன உரிமம் பறிபோதல் என தொடர்ந்து பிரச்சினைகளிலேயே சிக்கினார். பைக் ரேஸ் என்ற பெயரில் விபத்து ஏற்படுத்துதல் தொடர்பாக இவருடைய வாகன உரிமம் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகி ஹீரோவாக களமிறங்கினார். ஐபிஎல் என்ற பெயர் கொண்ட அந்தப் படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கிறார். கூடவே நடிகை அபிராமி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் TTF வாசனுக்கு ரேஸிங் ஸ்டார் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பல சாதனைகளை கடந்த முன்னணி நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை துறந்து வரும் நேரத்தில் நடிக்கும் முதல் படத்திலேயே ரேஸிங் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார் டிடிஎஃப் வாசன். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் TTF வாசனை அழகான தமிழ் நடையில் அழைத்து வரவேற்றார் தொகுப்பாளினி. மேடைக்கு வந்ததும் மைக்கை பிடித்து பேசிய டிடிஎஃப் வாசன் ‘அக்கா கூமாப்பட்டி அண்ணன் நல்லா இருக்காரா’ என அந்த தொகுப்பாளினியை பார்த்து கேட்டார்.
உடனே அந்த தொகுப்பாளினி பயந்து ‘ஐயோ அது நான் இல்லை. நீங்க வேற’ என சொல்லி நழுவினார். ஓ அப்படியா? அது நீங்க இல்லையா? ரெண்டு பேரும் ஒரே மாதிரியா இருக்குறதால் நான் தான் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன். எனக்குத்தான் பல்பா? சாரிங்க என சொல்லி மன்னிப்பு கேட்டார் TTF வாசன். அந்த தொகுப்பாளினி பார்ப்பதற்கு சின்னத்திரை நடிகை சாந்தினி மாதிரி இருந்ததனால் TTF வாசன் கன்ஃப்யூஸ் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
