சூர்யா படத்திலிருந்து வெளியேறிய உறியடி விஜயகுமார்!.. நல்லாத்தான போயிட்டு இருந்துச்சி!..

உறியடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஜயகுமார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என வலம் வருபவர். உறியடி திரைப்படம் 2016ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் இளைஞாக விஜயகுமார் நடித்திருந்தார்.

சினிமா மீது இருக்கும் ஆசையில் ஐடி செக்டரில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு வந்தவர் இவர். சொந்தமாக ஒரு பட நிறுவனத்தையும் துவங்கினார். 2019ம் வருடம் உறியடி 2 படம் வெளியானது. சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தில் வசனமும் எழுதி இருந்தார்.

அதன்பின் ஃபைட் கிளப் என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு வெளியான எலக்சன் படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நண்பர்தான் விஜயகுமார். இருவரும் வாடா போடா நண்பர்கள். ஆனால், லோகேஷ் இயக்கிய எந்த படத்திலும் விஜயகுமார் நடித்தது இல்லை. இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடித்து வந்தார் விஜயகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் நடைபெற்று வந்தது.

இந்த படத்தில் 4 வில்லன்களில் ஒருவராக நடித்து வந்தார் விஜயகுமார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், துவக்கம் முதலே கார்த்திக் சுப்பாராஜுக்கும் அவருக்கும் செட் ஆகவில்லையாம். அவர் ஒன்று சொல்ல.. இவர் ஒன்று சொல்ல என எதுவுமே செட் ஆகாமல் இருந்திருக்கிறது.

ஒருகட்டத்தில் ‘நான் இந்த படத்தில் நடிக்கவில்லை’ என சொல்லிவிட்டு படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம் விஜயகுமார். இப்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தேடி வருகிறதாம் படக்குழு.

Mugas
Mugas  

Related Articles

Next Story