×

ஆத்தாடி இத்தனை கோடியா?.. மீண்டும் நடிக்கவரும் வடிவேலுவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வடிவேலு நடிக்கவுள்ள புதிய படங்களின் சம்பள விபரம் வெளியே கசிந்துள்ளது
 
vadivel
ஹைலைட்ஸ்:
லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக 2 திரைப்படங்கள் வடிவேலு நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும், அதில், ரூ.4 கோடி தனது சம்பளத்தில் கொடுத்துவிடுவதாக வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக 2 திரைப்படங்கள் வடிவேலு நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும், அதில், ரூ.4 கோடி தனது சம்பளத்தில் கொடுத்துவிடுவதாக வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷங்கரின் தயாரிப்பில் உருவான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் அப்படத்திலிருந்து வடிவேலு வெளியேறினார். அப்படத்திற்காக போடப்பட்ட அரங்குகள் பல நாள் அப்படியே கிடக்க தயாரிப்பாளர் ஷங்கருக்கு ரூ.2 கோடி நஷ்டம். மேலும், வடிவேலுக்கு முன் பணமாக அவர் கொடுத்தது ரூ. 3 கோடி. அதன்பின் படப்பிடிப்பு நடக்கவில்லை.

vadivelu

எனவே, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் அளிக்க வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. எனவே, கடந்த 4 வருடங்களாகவே வடிவேலு திரைப்படங்களில் நடிக்கவில்லை. பலரின் முயற்சிக்கு பின்னர் தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கையில் எடுத்த லைக்கா நிறுவனம், வடிவேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர் மீதான புகாரை ஷங்கர் வாபஸ் பெற்றார்.

shankar

மேலும்,  லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக 2 திரைப்படங்கள் வடிவேலு நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும், அதில், ரூ.4 கோடி தனது சம்பளத்தில் கொடுத்துவிடுவதாக வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வடிவேலுவுக்கான தடை நீங்கிய மீண்டும் அவர் களம் இறங்கவுள்ளார். அடுத்து லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், இந்த 2 படத்திற்கும் சேர்த்து வடிவேலுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News