Categories: Cinema News latest news

நடிப்புக்காக கூட அத செய்யமாட்டேன்.. மாஸ் ஹிட்டான காமெடி சீன்.. தவறவிட்ட வடிவேலு..

தமிழ் திரையுலகின் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பால் அழைக்கப்படும் வடிவேலுவை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை நடிகர் ராஜ்கிரணை சேரும். கவுண்டமணி, செந்தில் இருவரும் கோலோச்சிய காலத்தில் நடிக்க வந்தாலும் அவர்களுக்கு பிறகு ஒரு நிலையான மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டார் வடிவேலு.

Vadivelu1

தன்னுடைய காமெடியான முக பாவனையால் அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தவர். நடிகர்களில் எப்படி சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், அஜித், விஜய் ஜோடி கலக்கினார்களோ நகைச்சுவையிலும் வடிவேலு – விவேக் ஜோடி கலக்கிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் படவாய்ப்புகள் குவிந்தன. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் படிக்காதவன்.

இந்தப் படத்தில் காமெடி நடிகராக விவேக் கலக்கியிருப்பார். அதுவும் அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்திருப்பார். அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் வடிவேலுவாம். அந்தப் படத்தில் ஒரு சீனில் வில்லன் நடிகரின் காலைப் பிடித்து கெஞ்சுவது மாதிரியான காட்சியை படமாக்கியிருப்பார்கள்.

vivek

அப்போது வடிவேலு நான் எப்பேற்பட்ட நடிகர், நான் போய் இன்னொருவர் காலைப் பிடிப்பது நன்றாக இருக்காது, என்னால் பிடிக்கவும் முடியாது என்று சொல்லிவிட்டாராம். மேலும் இயக்குனர் சொல்லியும் மறுத்து விட்டாராம். அதன் பின்னர் விவேக் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் விவேக்கை விட அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுதான் பிரம்மாதமாக நடித்திருந்தார். அந்த ஒரு காட்சிக்காகத்தான் என்னால நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று அந்த படத்தில் நடித்தவரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறினார்.

vivek

Published by
Rohini