கேப்டன் சாவுக்கு போனா திட்டியிருப்பாங்க!.. அவர் சொர்கத்துலதான் இருப்பார்!.. மனம் திறந்த வடிவேலு!..
‘வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால் நல்ல மனிதன் கிடையாது. நன்றியுணர்ச்சி என்பது அவரிடம் இருக்காது’ என்று திரையுலகில் மட்டுமல்ல.. அவரோடு பல படங்களிலும் நடித்த சின்ன சின்ன காமெடி நடிகர்களும் கூட பல பேட்டிகளில் சொன்னார்கள்.
விஜயகாந்த் வசித்த அதே தெருவில் வடிவேலு வீடு வாங்கினார். அவரின் வீட்டின் முன்பு தேமுதிக தொண்டர்கள் காரை நிறுத்தியிருக்க அதை வடிவேலு எடுக்க சொல்ல, அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் வடிவேலுக்கு கோபம் ஏற்பட்டது. எனவே விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போனார்.
பல ஊர்களுக்கும் சென்று விஜயகாந்தை மிகவும் அசிங்கமாகவும், அவதூறாகவும், மரியாதை குறைவாகவும் பேசினார் வடிவேலு. ஆனால் அந்த தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக மாறினார் விஜயகாந்த். அதன்பின் அடக்கி வாசிக்க துவங்கினார் வடிவேலு. தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகர்களுக்கு எந்த உதவியும் செய்யாத, அவர்களின் மரணங்களுக்கு கூட போகாத வடிவேலு விஜயகாந்த் இறந்தபோதும் அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை.

இத்தனைக்கும் வடிவேலுவின் சினிமா வளர்ச்சிக்கு துவக்கத்தில் காரணமாக இருந்தவர் விஜயகாந்த். சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வடிவேலு வாய்ப்பு கேட்டுப்போக கவுண்டமணி அவரை விரட்டினார். உடனே வடிவேல் விஜயகாந்திடம் போய் நிற்க இயக்குனரை அழைத்து ‘எனக்கு குடை பிடிப்பது போல் இவனுக்கு ஒரு வேஷம் கொடு’ என சொல்லி வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதோடு மாற்றுத் துணிக்கு கூட காசு இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு வேட்டி சட்டைகளையும் வாங்கி கொடுத்தார் விஜயகாந்த். ஆனால் வடிவேலுவுக்கு அந்த நன்றியெல்லாம் இல்லை.
தன்னை 4 வருடம் சென்னையில் தங்க வைத்து சோறு போட்ட ராஜ்கிரண் பற்றி கூட வடிவேலு நன்றியுணர்ச்சியோடு எங்கும் பேசியது இல்லை. அதுதான் வடிவேலுவின் குணம்.
விஜயகாந்தின் மரணத்திற்கு போகாத வடிவேலுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ரசிகர்கள் பலருக்கும் வடிவேலுவை பிடிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.
இந்நிலையில் மாரிசன் படத்தில் வடிவேலுக்கு மகனாக நடித்த குரு லக்ஷ்மன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மாரிசன் படத்தில் நடித்த போது வடிவேல் சாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது விஜயகாந்த் பற்றி பேச்சி வந்ததும் அவர் அமைதியாகிவிட்டார். ‘அந்த மனுஷன் சாவுக்கு கூட என்னால போக முடியல.. நான் போய் இருக்கலாம்.. ஆனா அப்படி போயிருந்தா அவரை இவ்வளவு திட்டிட்டு எதுக்கு வந்தான்னு தப்பாதான் பேசுவாங்க.. ஆனா மனசார சொல்றேன்.. அவர் சொர்க்கத்தில்தான் இருப்பார்’ என சொன்னார்’ என சொல்லியிருக்கிறார்.
