அன்போடு வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி - நடிகர் வடிவேலு
பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் வடிவேலு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்து தன்னை தானே தரம் தாழ்த்தி மக்களை மகிழ்விப்பதில் சிறந்தவர். இன்னும் இவரின் காலி இடத்தை நிரப்ப ஒருவரும் வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வடிவேலு படங்களில் நடிக்க ரெட் கார்ட் போட்டனர். இதனால் சில வருடங்களாகேவே படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் தான் முழு நேர பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12 (நேற்று) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினார்.
தற்ப்போது தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறி நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டு "அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள். விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்." என்று பதிவிட்டு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.இதோ அவர் பேசிய காணொளி...