×

வந்துட்டான்யா!..வந்துட்டான்யா...வைகைப்புயல் வடிவேலுவின் டாப் 10 படங்கள் 
 

வைகைப்புயல் வடிவேலுவின் டாப் 10 படங்கள் 
 
vadivelu11

சூனா பானா (கண்ணாத்தாள்), நாய் சேகர் (தலைநகரம்),  கைபுள்ள (வின்னர்), ஸ்நேக் பாபு (ஆரியா படம்) போன்ற கேரக்டர்கள் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாது. இத யார் நடிச்சான்னு கேட்டாலே வடிவேலுன்னு சொல்லிடுவாங்க...இவரது காமெடி டயலாக்குகள் தான் இன்றைய மீம்ஸ்களின் ட்ரெண்டாக உள்ளது. கூகுளைத் தட்டி ஒரு நகைச்சுவையைத் தேடினால் போதும். இவர் தான் முன்னால் வந்து நிற்பார். இவர் யாரு இவருடைய ஹிஸ்ட்ரி என்னன்னு கொஞ்சம் பார்க்கலாம்...

1991ல் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானார் வடிவேலு. மதுரை இவரது சொந்த ஊர் என்பதால் இவரை வைகைப்புயல் வடிவேலு என்றே அனைவரும் அழைத்தனர். பள்ளியில் படித்த அனுபவம் இவருக்கில்லை என்றாலும் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கிற லூட்டியில் அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை வர ஆரம்பித்தது. நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களை அரங்கேற்றினார். அதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவரே நடித்தார். 

அந்த சமயத்தில் தந்தை இறந்து விடவே குடும்பம் வறுமையில் வாடியது. அப்போது போட்டோ பிரேம் செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த ஊருக்கு ராஜ்கிரண் வரவே... எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைத்தது. அதன்மூலம் சென்னை வந்து  சேர்ந்தார் வடிவேலு. அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் வடிவேலு செய்தார். அந்த சமயத்தில் தான் வடிவேலுவை ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகப்படுத்தினார். 

நகரம்

நகரம் படத்தில் நீ சரியான ஆம்பிளையா இருந்தா என் ஏரியா வந்து பார்றா...ன்னு வடிவேலு சுந்தர்.சி.யிடம் சவால் விட..., அவரும் ஏரியா...வர..., நீ சொன்ன மாதிரி உன் ஏரியா வந்துட்டேன்...இப்ப என்ன செய்யப்போற...ன்னு சுந்தர் கேட்க,.. மணி என்ன 3 மணி.., 2.59க்கு வந்துருந்தன்னா...என் ஆளுக உன்ன பொழந்துருப்பாங்க..., ஏன் இப்ப வேணா அடி...மதியம் 3 மணி என் லஞ்ச் டைம்...இந்த நேரத்துல அன்னத்துல தான் நான் கை வைப்பேனே தவிர யார் கன்னத்திலயும் கை வைக்க மாட்டேன்...அதுக்காக இந்த அசட்டுத் தைரியத்தோட என் தெருவுக்கு வந்துராத...வந்தான்னு சுந்தர் கேட்க.., அங்க என் டையத்த கீப் அப் பண்ண மாட்    டேன்...ரொம்ப உக்கிரமா...இருப்பேன்னு வடிவேலு சொல்வார். 

அடுத்த சில நிமிடங்களில் சுந்தர் அவரது தெருவிற்கே வந்து நிற்பார். என்னடா...ன்னு கேட்க, இருப்பா...கொஞ்சம் யோசிக்க விடும்பார் வடிவேலு...பின் அருகில் விளையாடிய சிறுவர்களைப் பார்;த்து....இது என்ன என்பார் பசங்கல்லாம் விளையாடுறாங்க....என் போர்க்குணத்தையும், முரட்டுக்குணத்தையும் கண்டு இந்த பிஞ்சு உள்ளங்கள் எதிர்காலத்தில வன்முறைல இறங்கி விடக்கூடாது என்பதற்காக நான் உன்னை அடிக்காம விடுறேன்னு சொல்வார். என் வீட்டுப்பக்கம் வந்துப் பார்றான்னு சொல்லிவிட்டு செல்வார். .வீட்டுக்கு வந்தாச்சு...இப்ப என்னடா பண்ணுவ...உடனே வடிவேலு அவரது காலில் விழுந்து சும்மா ஒரு பேச்சுக்கு அங்க வா...இங்க வான்னு சொன்னா...சொன்ன எடத்துக்கெல்லாமாடா வந்து பீதிய கிளப்புவீக...நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்லப்பா...வெறும் பாடி லாங்குவேஜ்தாம்பா...நான் பைட்டர் இல்லப்பா...வெறும் பில்டப் தாம்பா...ன்னு வடிவேலு சொல்லும் காட்சி வைகைப்புயல் தான்னு நிரூபித்து இருப்பார் வடிவேலு.

முருகா

இந்தப்படத்தில் வடிவேலுவின் காமெடி டயலாக்குகள் படுசூப்பராக இருக்கும். மண்ட பத்ரம், வேலூர் ஜெயிலை வெள்ளையடிச்சி வாடகைக்கு விட்டுபுட்டு திரியிறோம், போவியா என் சிப்ஸ், நாங்கெல்லாம் ராவானா ரவுடி என்ற டயலாக்குகள் இந்தப் படத்தில் தான் வருகிறது. 

மாயி 

வடிவேலு சரத்குமாருடன் இணைந்து நடித்த படம்...இது.
இந்தப்படத்தில மச்சான் சாச்சிபுட்டாடா, எங்கேயோ போய்ட்டடா நீ எங்கேயோ போய்ட்டடா, சொல்லிக்காட்டுறண்டா என் வென்று, உங்க அக்கா வேற இருக்காள உங்கொக்கா...போன்ற டயலாக்குகள் அவருக்கே உரிய பாணியில் சொல்லும்போது திரையரங்கம் வெடிச்சிரிப்பால் அதிர்கிறது. 

அதே படத்தில் பொண்ணு பார்க்கும் படலம் பட்டையைக் கிளப்பும். வாம்மா மின்னல்னு  சொன்னதும் பொண்ணு மின்னல் மாதிரி போகும். உடனே என்னம்மா...அவரு என்னமோஅ மின்னல்ங்கறாரு...மின்னல்...மாதிரி சரக் சரக்னு போற...என்று வடிவேலு ஆவேசமாக கூற வயிறை குலுங்க வைக்கிறது நகைச்சுவை.

ஆதவன் 
வடிவேலு சூர்யாவுடன் இணைந்து நடித்த படம் ஆதவன். இப்படத்தில் நான் வேர்ல்டு பூரா பேமஸ், ஜிகர்தண்டா தூத் ப்ளீஸ்..., என்ன எப்படியாச்சும் காப்பாத்திடுடா மாப்ளே.., மாப்ளே கிட்ட பர்சனலா பேசுறப்போ எக்ஸ்கியூஸ் மீ பர்சனல் மேட்டர் ப்ளீஸ்...2 ஸ்டெப் பேக்...னு சொல்றபோது சிரிக்காமல் இருக்க முடியாது.  சிரிக்காத உம்மணாக்கள் கூட உதட்டோரம் லேசாக புன்னகையை பூக்கும். வடிவேலு ஆனந்த்பாபுட்ட மாட்டிக்கிட்டு கப்பல்ல பேசுற சீனு எல்லாமே சூப்பரா இருக்கும்...

சந்திரமுகி

ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த படம் சந்திரமுகி. வடிவேலுவிடம் இந்த வீட்டோட ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமாடான்னு கேட்க, எஸ்டிடின்னா வரலாறு தானே..ன்னு வடிவேலு கேட்கவும், மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு...!, சோத்துலயும் அடிவாங்கியாச்சு, சேத்துலயும் அடிவாங்கியாச்சு., குதூகலமாக இருக்கற வீட்ல கும்மியடிச்சிராதப்பா..., என்ற டயலாக்குகள் சிரிப்புக்கு கேரண்டி...இதே படத்தில் ரஜினியிடம் பேய் இருக்கா...இல்லையான்னு சொல்லுப்பா...பேய் வருதுன்னா சில அறிகுறிகள் வச்சி கண்டுபிடிச்சிரலாம்....தூரத்துல ஒரு நாயி ஊ...ன்னு...காத்துல...ஜன்னல்லாம்...அப்டீயே...படபடபட....படபடபட...ன்னு அடிக்கும்...இப்ப காத்துல ஜன்னல்லாம் படபடன்னு அடிக்குதா...அடிக்குதப்பா...அடிக்குது...ன்னு வடிவேலு சொல்ல..., லேசா காத்துல மல்லிகைப்பூ வாசம் வீசும்....வீசுதாப்பா....வீசுதப்பா.....வீசுது...!...ஜில்....ஜில்...னு சலங்கை சத்தம் கேட்கும்.....ஐயோ....சலங்கை சத்தமும் கேட்குதே...ன்னு பயந்து அலறியபடி வடிவேலுவிடம் காத்துல ஒரு உருவம் மாதிரி வெள்ளையா கௌம்பும்னு...ரஜினி சொல்ல....கௌம்பிருச்சுப்பா...கௌம்பிருச்சுப்பா...ன்னு வடிவேலு அலற தியேட்டர் சிரிப்பால் அதிர்கிறது. 

போக்கிரி 

வடிவேலு விஜயுடன் இணைந்து நடித்த படம் போக்கிரி. இந்த குரங்கு பொம்ம எவ்ளோ..? மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டோமே...வட போச்சே...எதையும் பிளான் பண்ணி பண்ணணும்...னு சொல்ற டயலாக்குகள் இப்போது சொன்னாலும் சிரிப்பு தான்...இவை எல்லாம் வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகள்... 

இம்சை அரசன் 23ம் புலிகேசி 

2006ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. சிரிப்பை மட்டும் மையமாக வைத்து படம் எடுத்து  இயக்கியிருப்பார் சிம்புதேவன். படம் எதிர்பார்த்ததை விட அதிகளவு வெற்றி வாகை சூடியது.

பாட வர்ற புலவர்ட்ட வடிவேலு பேசுற வசனங்கள் எல்லாம் செம....! பாடும்...பாடி தொலையும்..., க...க...க...போ..., என் இனமடா...நீ..., ஒரு சிறிய புறாவுக்கு போரா...பெரிய அக்கப்போரா அல்லவா...இருக்கிறது...? , தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்...?என்ற வடிவேலு கேட்கும்போது சிரிப்பூக்கள் சிதறும் சத்தம் கேட்கிறது. 

ப்ரண்ட்ஸ் 

அப்பாட நான் கூட புதுசுன்னு நினைச்சு பயந்துட்டங்க..., என்ன பீலிங்கு....எனக்கு தான்டா பீலிங்கு..., ஆணியே புடுங்க வேண்டாம்..., டேய்;...மெல்ல...மெல்ல...ன்னு சூர்யாட்ட பேசற டயலாக்கும், பர்னிச்சர் மேல கைய வெச்ச.. மொத...டெட் பாடி நீ தான்...னு பேசற டயலாக்கும் ரொம்பவே சிரிக்க வைக்கிறது. காண்ட்ராக்டர் நேசமணின்னா வேர்ல்டு பூரா தெரியும்....வடிவேலு பெயிண்ட் அடிக்க பெயிண்ட்,. ப்ரஷ், டப்பாக்கள், ஏணி எல்லாவற்றையும் அப்ரண்டீஸ்களோடு ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்து இறக்கச் சொல்லும் காட்சியின் நீளமான நகைச்சுவைக் காட்சியாக இருந்தபோதும் ஒரு 20 நிமிடமாவது விழுந்து விழுந்து சிரிக்கலாம்...

வின்னர்

இந்த கோட்ட... தாண்டி நீயும் வரக்கூடாது.., நானும் வரமாட்டேன்...என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்..?, வேணா....வலிக்குது....அழுதுருவேன்.....இப்படியே...உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்களடா...ன்னு படம் முழுவதும் சிரிப்பு பஞ்ச்களாகவே வடிவேலு பேசி அசத்தியிருப்பார். வடிவேலுவின் சிரிப்புக்காகவே ஓடிய படம் இது.

வெற்றி கொடி கட்டு 

வடிவேலு பார்த்திபனுடன் வெற்றி கொடி கட்டு படத்தில் எந்த இடத்துல வேலை பார்த்தன்னு கேட்க துபாய்ல ன்னு பார்த்திபன் சொல்ல, துபாய்ல எந்த அட்ரஸ்னு கேட்க...நம்பர் 3 விவேகானந்தர் தெரு, துபாய் மெயின்ரோடு, துபாய். அட்ரஸ திருப்பி சொல்லுன்னு வடிவேலு கேட்கும்போது, பார்த்திபன்;;;;....துபாய், துபாய் மெயின்ரோடு, விவேகானந்தர் தெரு, நம்பர் 3ன்னு சொல்வார். என்னப்பா அப்படியே திருப்பி சொல்ற....நீ தானப்பா திருப்பி சொல்ல சொன்னன்னு சொல்வார் பார்;த்திபன்...இப்படி படம் முழுவதும் பார்த்திபனிடம் குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் வடிவேலு காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். 

From around the web

Trending Videos

Tamilnadu News