×

தலை சுத்துது!..நாட்டை பிரிக்காதீர்கள்!...மீண்டும் வருவேன்.. வடிவேலு பரபரப்பு பேட்டி....

 
vadivelu

கடந்த சில வருடங்களாகவே நடிகர் வடிவேலு அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. 24ம் புலிகேசி பட பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது முக்கிய காரணம். அந்த பஞ்சாயத்துக்கள் தற்போது தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் வடிவேலு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்டாலின் செயல்பாடு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடிவேலு ‘உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். கருணாநிதியை விட ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதைப்பார்த்தால் ஐயா கருணாநிதியே சந்தோஷப்படுவார்’ என தெரிவித்தார்.

கொங்குநாடு கோரிக்கை பற்றி பதில் கூறி அவர் ‘நாடு நாடு என தனியாக பிரித்தால் என்னாவது?..  நினைத்தாலே தலை சுற்றுகிறது. நாட்டை பிரிக்காதீர்கள்’ என பதில் கூறினார்.

மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு ‘நல்லது நடக்கும்.. மீண்டும் வருவேன்’ என பதில் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News