Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விவேக் மறைவு! – கண்ணீர் விட்டு கதறிய நடிகர் வடிவேலு

விவேக் மறைவு! – கண்ணீர் விட்டு கதறிய நடிகர் வடிவேலு

b6e215b972f562b20ec05fcccb26f6bb

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விவேக்கின் நண்பரும், அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் வடிவேலு வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அந்த வீடியோவில் ‘விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்துல்கலாம் ஐயாவுடன் நெருக்கமாக இருந்த அவர் மரம் நடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன். வெளிப்படையாக பேசும் நல்ல மனிதர் விவேக். நான் மதுரையில் இருப்பதால் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை’ என அதில் அவர் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top