Categories: Cinema News latest news

மீண்டும் நேருக்கு நேர் போட்டி… மோதப்போகும் விஜய்-அஜித் படங்கள்…. மாஸ் பிளான் ரெடி…

விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் கடந்த பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மோதியது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதின. இதில் “துணிவு” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. “வாரிசு” திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

Leo

இதனை தொடர்ந்து தற்போது விஜய் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் அஜித் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

Vida Muyarchi

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலில் பேசிய பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, ஒரு சூடான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பும் வருகிற ஜூலை மாதம் ஒரே சமயத்தில் தொடங்கப்படவுள்ளதாம். “தளபதி 68” திரைப்படம் வெளியாகும் அதே நாளில் “விடாமுயற்சி” திரைப்படத்தை வெளியிட அஜித்குமார் முடிவு செய்துள்ளாராம். இவ்வாறு செய்யாறு பாலு தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Gopichand

“தளபதி 68” திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிச்சந்த் மல்லினேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே “வாரிசு” திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் விஜய் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மொட்டை மாடியில் வெயிலில் கிடந்த சாந்தனு.. எல்லாத்துக்கும் அந்த இயக்குனர்தான் காரணம்!.

Published by
Arun Prasad