அஜித் கூட நடிப்பீங்க!. என் கூட நடிக்க மாட்டீங்களா?!.. நடிகையிடம் கேட்ட விஜய்!…
நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்தவர். ரஜினிக்கு பின் அதிக ரசிகர்களை உருவாக்கியவர் விஜய். அதே நேரம் விஜய்க்கு சம போட்டியாளராக வந்தவர்தான் அஜித். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே ஆக்சன் ரூட்டுக்குமாறு மாறினார்கள். ஆக்ஷன் ஹீரோவாக இருந்தவர்கள் ஒருகட்டத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்கள். விஜய்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜயின் பல படங்களோடு அஜித்தின் படங்கள் போட்டி போட்டிருக்கிறது. விஜயின் வாரிசு படத்தோடு அஜித்தின் துணிவு படம் போட்டி போட்டு வெளியாகி நல்ல வசூலையும் பெற்றது.. விஜய் இப்போது சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றிருக்கிறார். அஜித்தோ கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார்.
90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினியுடன் முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன், ஆனந்த பூங்காற்றே, வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், விஜயுடன் மீனா நடிக்கவே இல்லை.
இந்நிலையில்தான், மீனா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் சார் என்னிடம் ஒருமுறை ‘என்னுடன் நீங்கள் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டீர்கள்.. ஆனால் அஜித்துடன் 3 படங்களுக்கு மேல நடிச்சிருக்கீங்க’ என்று நேரடியாக கேட்டார். அதற்கு கால்ஷீட்தான் சார் காரணம்.. ஒரு படம் வரும்போது வேறுபடத்தில் கமிட் ஆகியிருந்ததால் உங்களுடன் நடிக்க முடியவில்லை’ என்று சொன்னேன். நான் விஜயுடன் நடிக்கவில்லை என்றாலும் என் மகள் அவரின் தெறி படத்தில் நடித்து விட்டார்’ என சொல்லியிருக்கிறார் மீனா.
