ரஜினி படம் தோத்து போனபோது விஜய் அப்படி அழுதாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!…

0
96

சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்தவர்தான் விஜய். அதுவும் தீவிர ரசிகர். ரஜினி படம் ஒன்றை கூட விடமாட்டார். விஜயின் அப்பா ரஜினியை வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ படம் எடுத்தபோது ரஜினி அங்கிளைப் பார்க்க வேண்டும் என அப்பாவிடம் அடம்பிடித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர்தான் விஜய்.

அப்போது அவர் ரஜினியுடன் எடுத்துகொண்ட புகைப்படம் இப்போதும் இணையத்தில் இருக்கிறது. சினிமாவில் தானும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்க்கு டீன் ஏஜிலேயே வந்தது. அப்பாவை நச்சரித்து, சண்டை போட்டு, சாப்பிடாமல் இருந்து, வீட்டை விட்டு வெளியேறி என பல வேலைகளை செய்து ஒருவழியாக சம்மதிக்க வைத்தார்.

நாளைய தீர்ப்பு என்கிற படம் துவங்கி சில படங்கள் அப்பாவின் இயக்கத்தில் நடித்தார். அதன்பின் பூவே உனக்காக படம் அவரை பிரபலமாக்கியது. அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற படங்களின் வெற்றி விஜயை ஒரு வசூல் மன்னனாக மாற்றியது.

ஒருகட்டத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். இப்போது விஜயின் சம்பளம் ரஜினியை விட அதிக எனவும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ரஜினியை தனது போட்டி நடிகராக விஜய் பார்க்கிறார் எனவும் சிலர் சொல்வதுண்டு. சிலரோ விஜய் சின்ன பையனாக இருக்கும்போதே ரஜினி சூப்பர்ஸ்டார். விஜய் எவ்வளவு முயன்றாலும் ரஜினி ஆக முடியாது எனவும் சிலர் சொல்வதுண்டு.

அதேபோல், ரஜினியின் பாபா படம் தோல்வி அடைந்தபோது விஜய் தனது நணபர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடினார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில் சொன்ன தகவல் இந்த செய்திக்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது. விஜய் ரஜினி சாரின் மிக தீவிர ரசிகன். பாபா படம் தோல்வி என கேள்விப்பட்டதும் ரொம்ப பீல் பண்ணி எங்களிடம் பேசி கண்ணீர் விட்டார். அந்த அளவுக்கு அவர் ரஜினியின் ரசிகர்’ என சொல்லி இருந்தார்.

ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்ன போது அவர் விஜயைத்தான் சொல்கிறார் என பலரும் நம்பினார்கள். ஆனால், அப்படத்தின் வெற்றி விழாவில் நான் விஜயை சொல்லவில்லை என விளக்கமளித்தார் ரஜினி. அதேபோல், லியோ பட விழாவில் ‘ஒரு சூப்பர்ஸ்டார்தான்’ என புகழந்து பேசினார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

google news