Connect with us

Cinema News

ஜனநாயகனில் தளபதி கச்சேரி!.. விஜயின் மரண மாஸ் டான்ஸ்!.. ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட்..

Jana nayagan: நடிகர் விஜய் ரசிகர்களிடம் பிரபலமானது அவரின் நடனத்திறமையை வைத்துதான். துவக்கம் முதலே அவருடைய எல்லா படங்களிலும் குறைந்தபட்சம் 5 பாடல்களில் விஜய் நடனமாடி இருப்பார். விஜயின் நடனத்தை பார்ப்பதற்காகவே அவரின் படங்களுக்கு போகும் ரசிகர்களும் ரசிகைகளும் உண்டு.

பல திரைப்படங்களில் அசத்தலாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் விஜய். தன்னுடைய ரசிகர்கள் தன்னிடம் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள் என புரிந்து கொண்டு நடனமாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்துவார் விஜய். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ மற்றும் வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ ஆக இரண்டு பாடல்களும் விஜயின் நடன அசைகள் மூலம்தான் ஹிட் அடித்தது.

jananayagan
#image_title

இந்நிலையில்தான் ஜனநாயகன் படத்திலும் ரசிகர்கள் சூப்பர் ட்ரீட் கொடுத்திருக்கிறாராம் விஜய். ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் இந்த படத்தில் ‘தளபதி தளபதி கச்சேரி தளபதி’ என்கிற பாடல் ஒன்று வருகிறதாம். இந்த பாடலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடனமாடி அசத்தியிருக்கிறாராம் விஜய்.

படப்பிடிப்பில் இருந்தவர்களும், இந்த பாடலில் அவருடன் நடனமாடியவர்களுமே மெய்மறந்து பார்க்கும் அளவுக்கு விஜய் சிறப்பாக நடனமாடி கைத்தட்டலை வாங்கி இருக்கிறாராம். ஜனநாயகன் விஜயின் கடைசிப் படம் என சொல்லும் நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த பாடல் மூலம் ட்ரீட் வைத்திருக்கிறார் விஜய் என்று பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top