
Cinema News
லோகேஷ் மூலம் ரூட்டு போட்ட கமல்…நைசா நழுவிய விஜய்…கடைசியில கேமியோதான் மிச்சம்…
Published on
By
தமிழ் சினிமாவில் தனது அப்பாவின் இயக்கத்தில் நடிகராக சில படங்களில் நடித்து பின் பூவே உனக்காக திரைப்படம் மூலம் கவனிக்க வைத்தவர் நடிகர் விஜய். அதன்பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி தனக்கென ரசிகர்களை உருவாக்கி இளைய தளபதியாகவும் மாறினார். தற்போது தளபதி விஜயாக திரைத்துறையில் உயர்ந்து நிற்கிறார்.
vijay
துவக்கத்தில் லட்சங்களில் இருந்த விஜயின் சம்பளம் இப்போது ரூ.125 கோடி வரை உயர்ந்துவிட்டது. சுமார் ரூ.150 கோடி செலவில்தான் இவர் நடிக்கும் படங்கள் உருவாகி வருகிறது. ரஜினியின் படங்கள் கூட வசூலில் சறுக்கிவரும் நிலையில் விஜயின் படங்கள் ஓரளவுக்கு வசூலை எட்டி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் சம்பள விஷயத்தில் ரஜினியையே விஜய் முந்தி சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை.
தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Vijay
வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது விஜயின் 67வது திரைப்படமாகும். விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பின் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் கூட ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
lokesh, vijay
உண்மையில் லோகேஷ் – விஜய் இணையும் புதிய படத்தையும் கமலே தயாரிக்க ஆசைப்பட்டார். லோகேஷ் கனகராஜ் மூலம் அவர் நூல் விட்டதாகவும், ஆனால், விஜய் பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரே தயாரிக்கவுள்ளார். டிசம்பர் 5ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.
இதையும் படிங்க: கயல் சீரியலில் இருந்து விலகுகிறாரா சஞ்சீவ்?.. சரியான நேரம் பார்த்து செக் வைத்த நடிகை!..
ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் விஜய் நடிக்க மறுத்ததற்கு காரணம் இருக்கிறது. அதாவது, கமலின் மீது மிகவும் மரியாதை கொண்டவர் நடிகர் விஜய். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் உண்டு. அப்படிப்பட்டவரிடம் ரூ.125 கோடி சம்பளத்தை கேட்டால் கொடுப்பாரா இல்லையா என்பது தெரியாது. அவ்வளவு சம்பளத்தை கேட்பதற்கு விஜய்க்கும் தயக்கமாக இருக்கும் என்பதால்தான் விஜய் அதை மறுத்ததாக கூறப்படுகிறது.
kamal
விக்ரம் படத்திற்கு முன் லோகேஷ் இயக்க ரஜினி நடிக்கும் ஒரு படத்தை கமல் தயாரிப்பதாக இருந்தது. இதே காரணத்தினால்தான் ரஜினியும் விலகியதாக அப்போதே செய்திகள் வெளியானது.
தற்போது லோகேஷ் கேட்டுக்கொண்டதற்காக தளபதி 67 படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...