
latest news
TVK Vijay: விஜயுடன் அஜித்!.. போட்டோவை கொடுத்த ரசிகர்!.. தளபதி என்ன பண்ணார் பாருங்க!..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல மாவட்டங்களுக்கும் சென்று 20 முதல் 25 நிமிடங்கள் மக்களிடம் பேசுகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் கண்டிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்தது. அதன்பின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்தது. அதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் விஜய் தனது அரசியல் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார்.
விஜய் பனையூரை விட்டு வெளியே வருவதில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதில் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு சென்ற விஜய் இன்று நாமக்கல் சென்றிருக்கிறார்.
அடுத்து கரூருக்கு செல்லவும் அவர் திட்டமிடிருக்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்து பிரச்சார வேனில் காவல்துறை அனுமதி அளித்த இடத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியெங்கும் தாவெக தொண்டர்களும், ரசிகர்களும் அவரை நேரில் காண மிகவும் ஆர்வமுடன் காலை முதலே காத்திருக்கிறார்கள்.

மேலும், வழிநெடுக அவருக்கு பலரும் பரிசுப் பொருட்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு ரசிகர் அஜித்தும், விஜய்யும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ போஸ்டரை ஆல்பமாக உருவாக்கி அதை விஜயிடம் கொடுக்க விஜய் அதில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.