Categories: Cinema News latest news

பிரசாந்த் நடிக்கிறாருனு சொன்னதும் டென்ஷனான விஜய்! சொன்ன காரணம்தான் ஹைலைட்

Actor Vjay: விஜய் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் கோட். படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். யோகிபாபு வழக்கம் போல தனக்கு கொடுத்த கேரக்டரை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: மங்காத்தா படத்தில் அஜித் இல்லை!.. அது நான் பண்ன வேண்டிய படம்!.. புலம்பும் நடிகர்!…

படத்தில் மோகன் வில்லன் கதாபாத்திரம் என்று சொன்னாலும் வில்லனுக்குள்ள பவர் படத்தில் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் விஜயின் நெகட்டிவ் ஷேடு பார்ப்பவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. இதற்குமுன் விஜய் அழகிய தமிழ் மகன்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில்தான் நடித்திருப்பார்.

ஆனால் இந்தப் படத்தில் உள்ளது போல் பெரும் தாக்கம் அழகிய தமிழக மகன் படத்தில் ஏற்பட்டிருக்காது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயை பற்றி கூறும் போது ஒரு சுவாரஸ்யமாக சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். டி.சிவா கோட் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: ராமமூர்த்தியால் கலங்கும் குடும்பம்… விஜயாவிடம் சிக்கிய மீனா.. மகன்களை கண்டிக்கும் கோமதி

அதாவது படத்தில் பிரசாந்த் நடிக்கிறார் என வெங்கட் பிரபு விஜயிடம் சொன்னதும் விஜய் டென்ஷனாகி விட்டாராம். ‘நான் சினிமாவிற்குள் வரும் போது பிரசாந்த் ஒரு பெரிய ஹீரோ. அவரை போய் கேரக்டர் ரோலுக்கு நடிக்க வைப்பதா?’ என விஜய் டி.சிவாவிடம் சொன்னாராம்.

ஆனால் உள்ள வந்த பிறகுதான் ‘ச்ச.. பிரசாந்த் கூட இவ்ளோ நாளா நடிக்காம போயிட்டோமே’ என வருத்தப்பட்டாராம் விஜய். ஏனெனில் பிரசாந்த் பழகுவதற்கு மிகவும் ஜோவியலான டைப். ஹீயூமரான மனிதரும் கூட. அவர் செட்டில் இருந்தாலே சிரிப்பு சத்தமாகத்தான் இருக்குமாம்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ‘மனசிலாயோ’ அச்சு அசல் இந்தப் பாடலின் காப்பி! சரக்கு அவ்ளோதானா?

இதுதான் விஜய்க்கும் பிடிக்கும். இதை வைத்துதான் விஜய் அப்படி சொன்னாராம். அதுமட்டுமில்லாமல் விஜய்க்கும் பிரசாந்துக்கும் இடையே எப்பொழுதுமே ஒரு வைப் இருந்து கொண்டே இருக்குமாம். மேலும் பிரசாந்துக்கும் விஜய் என்றாலே மிகவும் பிடிக்கும் என ஏற்கனவே தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini