
latest news
TVK Vijay: 26 வருஷமா தளபதிய லவ் பண்றேன்!.. நாமக்கல்லில் தெறிக்கவிட்ட ரசிகை!..
30 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய்க்கு நிறைய பெண் ரசிகைகள் உண்டு. அதுதான் விஜயை உச்ச நடிகராகவும் மாற்றியது. இன்னும் சொல்லப்போனால் விஜய்யை ஒருதலையாய் காதலித்த பெண்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள்.
விஜய்க்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்த பின்னரும் கூட அவர் மீது ஆசையோடு இருக்கும் பெண்கள் இப்போதும் பலரும் இருக்கிறார்கள். பல பேட்டிகளிலும், டிவி சேனல்களிலும் இதை அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் நாமக்கல்லில் ஒரு ரசிகை விஜயை 26 வருடங்களாக காதலிப்பதாக சொல்லி அதிர வைத்திருக்கிறார். விஜய் தற்போது தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு சென்ற விஜய் இன்று மதியம் நாமக்கல் வந்தார். அவரை நேரில் பார்ப்பதற்காக இன்று காலை முதலே தவெக தொண்டர்களும், ரசிகர்களும் காத்திருந்தனர். அதேபோல் பல குடும்ப பெண்களும், இளம்பெண்களும் அவரைக் காண காத்திருந்தார்கள்.
அவர்களிடம் தொலைக்காட்சிகள் பேட்டி கண்டன. ‘2026ல் தளபதிதான் ஆட்சி அமைப்பார். சேரும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என சொல்கிறார்கள். ஆனால் 2026 தேர்தலில் என்ன நடக்கிறது என பாருங்கள்’ என மிகவும் நம்பிக்கையோடு அவர்கள் பேசினார்கள். அப்போது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த ஒரு ரசிகை ‘நான் 26 வருடங்களாக விஜய் சாரை காதலித்து வருகிறேன். இதை அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடமே சொல்லி இருக்கிறேன்.

விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. என் காதல் அவரிடம் என்னை கொண்டு சேர்க்கு என நம்புகிறேன். இன்று அவரை பார்க்க வந்திருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி விட்டாலும் நான் அவரை காதலிக்கிறேன். விஜய் கண்டிப்பாக தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். சனிக்கிழமை மட்டும் வெளியே வருகிறார் என அவரை சொல்கிறார்கள்.
அவர் எப்போது வந்தாலும் கூட்டம் கூடும். உதயநிதி வந்தால் இப்படி கூட்டம் கூடாது. விஜயை சீமான் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கெல்லாம் விஜயை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு பல நல்ல விஷயங்களை செய்வார்’ என அவர் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது