×

ரெய்டு ஓவர்.. மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய்....
 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து அவரின் பண்ணை வீடு, சாலிகிராமம் வீடு அனைத்திலும் சோதனை நடைபெற்றது.  மேலும், வினியோகஸ்தர், கடன் அளித்தவர் என மொத்தம் 38 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
 

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காசோலை மூலம் ரூ.300 கோடி மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இந்த சோதனையின் இறுதிகட்ட விசாரணைகள் நேற்று இரவே முடிந்த நிலையில், இன்று மாஸ்டர் படப்பிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொள்ள நெய்வேலி சென்றுவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News