Rajini: ரஜினி dual ரோலில் நடிச்சிருந்தா ஹிட்டாயிருக்கும்! என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் மகத்தான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு பல பேர் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி வந்தவர்கள் ஏராளம். அவருடைய ஸ்டைல், ஆக்ஷன் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் ஈர்க்கும்படியாக அமைந்து வருகிறது.
தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு பிறகு சிபிச்சக்கரவர்த்தியுடன் ஒரு படம் ரஜினி கமல் இணையும் படம் என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார் ரஜினி. குறிப்பாக ரஜினியும் கமலும் இணையும் படத்திற்காகத்தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தை நெல்சன் தான் இயக்க இருக்கிறார்.
அதற்கான புரோமோ சூட் நேற்றுதான் நடந்தது. அடுத்த வருடம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக ரஜினி ஆக்ஷன் சார்ந்த படங்களில் நடித்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் கிருஷ்ணாவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ரஜினியை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ரஜினி சிரஞ்ஜ்சீவி நடிப்பில் வெளியான திரைப்படம் ராணுவ வீரன். மிகுந்த எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட அந்தப் படம் தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாயிருக்கும் என விஜய் கிருஷ்ணா கூறினார்.
ஏனெனில் அந்தப் படத்தில் நக்சலைட் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருப்பார். அதனால் அனல் தெறிக்கும் வசனங்கள் சிரஞ்சீவிக்குத்தான் கொடுக்கப்பட்டது. சிரஞ்சீவி வசனம் பேசும் போதெல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடினார்கள். ரஜினியை விட சிரஞ்சீவியைத்தான் ரசித்தனர். அதனால் இந்தப் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக ஹிட்டாயிருக்கும் என விஜய் கிருஷ்ணா கூறினார்.
