தமிழ் ரசிகர்களின் ஆத்மார்த்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் தமன் இசையமைக்கிறார்.
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே லோகேஷுடன் இணைந்து மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்தார். ஆனால் மாஸ்டர் படம் வெளியான சமயம் லோகேஷ் என்னை முழுவதுமாக ஈடுபடவில்லை என்ற கருத்தை கொண்டுவந்தார். அதாவது கதையில் விஜய் அவருக்கு ஏற்ற மாதிர் கொஞ்சம் மாற்றிக் கொண்டார் என்பதை மறைமுகமாக கூறினார்.
ஆனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் படமாக விக்ரம் படம் விளங்கியதை எல்லாரும் கொண்டாடினார்கள்.கமலும் என் தலையீடு எதுவும் இந்த படத்தில் இருக்காது என்றே கூறினார். இதனையடுத்து விஜயின் தளபதி 67 படம் கண்டிப்பாக என்னோட படமாக இருக்கும் எனவும் லோகேஷ் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது படத்தின் கதையில் என்னோட தலையீடு சுத்தமாக இருக்காது எனவும் இயக்குனரின் விருப்பப்படியே கதை அமைகிறது எனவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒரு வேண்டுகோள் மட்டும் விடுப்பேன் அதுவும் என் ரசிகர்களுக்காக. படத்தில் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டு மற்றும் சண்டைக்காட்சிகள் இடம்பெற வேண்டும் என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…