Categories: Cinema News latest news

ஏதோ தெரியாம பண்ணிட்டேனுங்க!.. அபராதம் கட்டிய விஜய்க்கு அறிவுரை வழங்கிய போலீஸார்!..

 நடிகர் விஜய் படம் என்றாலே பூகம்பமே கிளம்புகிற மாதிரி ஏதாவது பிரச்சினைகளோடு தான் வெளியாகும். அது இப்ப-னு இல்ல. அவர் எந்த சமயத்தில் இருந்து ஒரு மாஸ் நடிகராக தன்னையும் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்களோ அதிலிருந்தே விஜயின் படங்கள் கவனிக்கப்பட ஆரம்பித்தது.

அதிலும் மாஸ்டர் பட ரிலீஸ் சமயத்தில் வருமான வரித்துறை சார்பாக ரெய்டு நடத்தப்பட்டு மிகவும் மனவேதனைக்கு ஆளானார். பல மணி நேரமாக அவரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு அதன் பின் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

vijay

இதை,  தான் நடித்த அடுத்த படமான பிகில் பட ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தாக்கினார். சர்கார் பட வெளியீட்டின் போதும் சரி, தலைவா பட வெளியீட்டின் போதும் சரி தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடித்துக்  கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ரிலீஸிலும் சில பல பிரச்சினகள் இருக்கின்றது. அதிலும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக படத்தை திரையிடலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்று வரை படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்ற தகவலே வெளியாகி கொண்டிருக்கிறது.

vijay

இது ஒரு பக்கம் இருக்க இரண்டு தினங்களுக்கு முன் தன் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களுடன் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். பிரியாணியுடன் தடபுடலான சாப்பாடும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்களை பார்க்க தன்னுடைய கருப்பு நிற காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க உள்ளே அமர்ந்திருந்தார்.

இதை புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த கருப்பு நிற ஸ்டிக்கர்  நிபந்தனை வெரும் பொதுமக்களுக்குத் தானா? விஐபிக்களுக்கு இல்லையா? என்று கேட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு 500 ருபாய் அபாராதம் விதித்தது.

vijay

நேற்று மாலை அந்த அபாரதத்தை விஜய் ஆன்லைன் மூலமாக கட்டியிருக்கிறார். கூடவே ரசிகர்கள் தன்னை  கண்டுகொள்ளாமல் இருக்க அவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்டது என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

இதை சம்மதித்த போக்குவரத்து துறை போலீஸார் வேண்டுமென்றால் தற்காலிகமாக கருப்பு நிறத்தாலான திரைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini