Jananayagan: ஜனநாயகன் ரிலீஸ் கன்பார்ம்!.. விஜயே வெளியிட்ட போஸ்டர்!..

 
jananayagan

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே, தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது மேலும் தாமதமானதால் ஒரு கட்டத்தில் மனுவை வாபஸ் வாங்கினார். அதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார்..

jananayagan

தற்போது ஆறு மாதம் ஆகிவிட்ட நிலையில் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. மேலும் படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகளில் தணிக்கை வாரியம் சில மாற்றங்களை செய்ய சொல்ல இயக்குனர் ஹெச்.வினோத் செய்து கொடுத்துவிட்டார்.

எனவே, வருகிற 23 அல்லது 24 தேதியில் ஜனநாயகன் படம் ரிலீஸ் என செய்திகள் வெளியானது. தற்போது அதை நிரூபிப்பது போல நடிகர் விஜயின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தை தயாரிக்கும் KVN  நிறுவனமும் விரைவில் தியேட்டரில் ஜனநாயகன் படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

Tags

From Around the web