நேர்ல வர முடியாது!. ஒன்லி வீடியோ கால்.. விவாகரத்து வழக்கில் விஜய் எடுத்த முடிவு!..
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அந்த விவாகரத்து மனுவில் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தான் வீட்டில் இருக்கும் போதே நடிகையை அழைத்துவந்து விஜய் குடும்பம் நடத்தியதாகவும், அதை தட்டி கேட்டால் தன்னை பொருளாதார ரீதியாக முடக்கியதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படவில்லை எனவும் பல புகார்களை கூறியிருந்தார்..
மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவதோடு, நடிகையின் மீது வழக்கும் தொடர்வேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த செய்தி வெளியாகி சில நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷாவை கூட்டிக்கொண்டு ஜோடி சகிதமாக ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவாகரத்து தொடர்பான வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. சங்கீதா மட்டுமே விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்..
அதோடு இரு தரப்பினரும் தாங்கள் நேரில் வர முடியாது என கூறிவிட்டதால் வருகிற ஜூன் 15ம் தேதி காணொளி மூலம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே தனது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கை விஜய் வீடியோ கால் மூலம் மட்டுமே அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
