Connect with us
vijay

Cinema News

அக்கட தேசத்துக்கு மட்டும் பறந்த வாழ்த்து! இதுவும் விஜயோட சேஃப் கேம்தானா? அரசியலுக்கு இது செட்டாகுமா?

Actor Vijay: சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பல பேரையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ப இந்த முடிவுகள் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. யார் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் விஜயின் ரியாக்ஷன் என்ன என்பதுதான் இந்த தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று.

தமிழ்நாட்டில் திமுக அதிக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று நாங்கள் தான் கிங் என நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ எந்த ஒரு வாழ்த்து செய்தியும் விஜயிடமிருந்து வரவில்லை. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில்  வெற்றி பெற்ற மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எந்த ஒரு வாழ்த்தும் விஜய்யிடம் இருந்து வரவில்லை.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்!.. இந்த தங்கத்தை தகரம்னு விட்டுட்டீங்களேடா!..

ஆனால் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று ஒரு கிங் மேக்கராக உருவெடுத்து இருக்கிறார். அவருக்கு தன் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் விஜய். அதைப்போல நடிகர் பவன் கல்யாண் அவருடைய வெற்றிக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றி தான் இப்போது அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது பெரிய அளவில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.

ஏனெனில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இங்கு உள்ள கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி வாழ்த்த சொன்னது சரிதானா என்ற ஒரு பார்வையில் விவாதிக்கப்படுகிறது. இதற்கு பதில் அளித்த மூத்த பத்திரிகையாளர் சுபைர் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது அரசியலையும் தாண்டி சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவருமே சினிமா குடும்பத்தை சார்ந்தவர்கள் தான்.

இதையும் படிங்க: ஜென்டில் மேன் டூ இந்தியன் 2… சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்திய ஷங்கர்…!

பவன் கல்யாண் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். சந்திரபாபு நாயுடு ப்ரொடக்ஷன் மற்றும் டிவி சேனல்கள் வைத்து ஒரு பக்கம் அந்த பிசினஸ்களையும் கவனித்துக் கொண்டு வருகிறார். அந்த ஒரு ஆங்கிளில் விஜய் வாழ்த்தை கூறியிருப்பார் என கூற உதயநிதி மட்டும் என்ன வெறும் அரசியல் கட்சித் தலைவரா? அவரும் தானே ரெட் ஜெயண்ட் என்ற நிறுவனம் வைத்திருக்கிறார். படங்களில் நடித்திருக்கிறார். அதையும் தாண்டி அவருடைய தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் சினிமாவே கதி என இருந்தவர் தானே? என்ற ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.

இதற்கும் பதில் அளித்த பத்திரிக்கையாளர் சுபைர் இன்று விஜய் இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு எல்லாவற்றையும் உற்று நோக்கி இருப்பார். ஒரு பக்கம் திமுக இன்னொரு பக்கம் பிஜேபி. இந்த இரு கட்சிகளும் ஒரு பெரும் ஆளுமையாக இருக்கின்றன. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்களை எதிர்த்து தான் விஜய் நிற்க போகிறார். அதனால் யாருக்கு வாழ்த்து சொன்னாலும் அதுவும் விஜயின் அரசியலுக்கு ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்திருக்கலாம் என்று சுபைர் கூறி இருக்கிறார்,

இதையும் படிங்க: இவங்களாம் இப்போ எங்க போனாங்க? 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்து காணாமல் போன பிரபலங்கள்

இன்னொரு பக்கம் பவன் கல்யாணின் தீவிர ரசிகர் தான் விஜய் என்ற ஒரு செய்தியும் பேசப்பட்டு வருகிறது. அதனால் கூட அந்த ஒரு அடிப்படையில் பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும் சுபைர் கூறினார். மேலும் விஜய்  அவருடைய ட்ரெண்டை கண்டிப்பாக மாற்ற வேண்டும் . ஏதோ புத்தகத்தை கொடுத்தோம். சில விழாக்கள் நடத்தினோம். இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்த கட்ட அரசியலுக்கு என்ன செய்யலாம்? புதுமையான செயல்கள் மூலம் எப்படி மக்களை தன் பக்கம் இழுக்கலாம் என்பதை விஜய் கொஞ்சம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப அவரும் மாற வேண்டும் என்ற ஒரு அறிவுரையையும் சுபைர் கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top