×

மக்கள் மனதில் நிற்கும் கருப்பு எம்.ஜி.ஆருக்கு இன்று பிறந்தநாள்...

 
vijayakanth

நடிகர் விஜயகாந்த் 25.8.1952 ல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால் விஜயகாந்த் மதுரையிலேயே வளர்ந்தார்.

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கி வந்த ரைஸ் மில்லில் விஜயகாந்த் டீன் ஏஜ் பருவத்திலேயே வேலை செய்து வந்தார். 

1990ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். 

2005ல் தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை சந்தித்தார். 

vijayakanth

இயக்குனர் காஜா தான் விஜயராஜ் என்ற இவரது பெயரை விஜயகாந்த் என மாற்றினார். 1978ல் இருந்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1991ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் இவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப்படம் தான் இவருக்கு கேப்டன் என்ற சிறப்புப் பெயரைத் தந்தது. 

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட்டானவை தான். வசன உச்சரிப்பில் இவர் மன்னன். எவ்வளவு நீளமான வசனம் என்றாலும் அச்சு பிசகாமல் புள்ளி விவரத்துடன் அசால்டாக பேசி அசத்துவார்.

இவரது படங்களில் மக்களுக்கான நலத்திட்டங்களே பெரிதும் இருக்கும். தாய்க்குலங்கள் போற்றும் படங்கள் இவரது வளர்ச்சிக்கு பிளஸ் பாயிண்ட் ஆனது. அதிகம் கவர்ச்சி இருக்காது. நகைச்சுவையிலும் விஜயகாந்த் கொடிகட்டி பறந்தார்.

இவர் நக்கலாக நாக்கைக் கடித்துக் கொண்டு ஆங்...என சொல்லும் அழகோ அழகுதான். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்களுக்கு இவரது நடிப்பு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும். இவரது நடிப்பையும் குரலையும் மிமிக்ரி செய்யாத கலைஞர்களே இல்லை எனலாம். 

ரசிகர்கள் இவரது நல்ல மனசைக் கண்டு கருப்பு எம்ஜிஆர் என்றே செல்லமாக அழைத்தனர்.

vijayakanth


சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நல்ல நாள், ஈட்டி, நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், எனக்கு நானே நீதிபதி, கரிமேடு கருவாயன், தர்மதேவதை, வீரபாண்டியன், கூலிக்காரன், சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன், தெற்கத்திக்கள்ளன், பூந்தோட்டக்காவல்காரன், எங்கிட்ட மோதாதே, சத்ரியன், சந்தனக்காற்று, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர், ஏழை ஜாதி, பொன்மனச்செல்வன், ராஜதுரை, என் ஆசை மச்சான், சேதுபதி ஐபிஎஸ், பதவிப்பிரமாணம், காந்திபிறந்தமண், கருப்பு நிலா, அலெக்சாண்டர், தர்மசக்கரம், வாஞ்சிநாதன், எங்கள் அண்ணா, ரமணா, வல்லரசு,பேரரசு. 

இவரது படங்களில் தமிழ்த்திரையுலகைப் புரட்டி போட்ட படங்கள் சிலவற்றைக் காணலாம். 

வைதேகி காத்திருந்தாள்

1984ல் வெளியான இப்படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். விஜயகாந்த், ரேவதி, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.

vijayakanth

அன்றைய வானொலிகளில் இந்தப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்படாத நாள்களே இல்லை எனலாம். அந்த அளவு பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது. அழகு மலராட, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, காத்திருந்து...காத்திருந்து, மேகம் கருக்கையிலே.., ராசாவே உன்னை காணாத நெஞ்சு....காத்தாடி போலாடுது...ஆகிய பாடல்கள் நம்மை மெய்மறக்கச் செய்பவை.

காதல் தோல்வியில் வாடும் நடிகராக விஜயகாந்த் நடித்துள்ளார். அழுக்கு உடையும், பரட்டைத்தலை, தாடி என முற்றிலும் மாறுபட்ட விஜயகாந்ததைப் படத்தில் காணலாம். அதிகம் வசனம் பேசும் விஜயகாந்த்திற்கு இப்படத்தில் வசனங்களே குறைவு தான். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என்ற காமெடி கவுண்டமணி செந்தில் காமெடி இப்படத்தில் தான் இடம்பெறுகிறது.  

பொன்மனச் செல்வன்

1989ல் பி.வாசு இயக்கிய படம் பொன்மனச் செல்வன். விஜயகாந்த், ஷோபனா, ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமி, சரோஜாதேவி என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளம் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் அடிச்சேன், இனிமேலும், கானக் கருங்குயிலே, நீ பொட்டு வச்ச, பூவான, தோப்பிலே இருந்தாலும் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

கேப்டன் பிரபாகரன்

ccc


1991ல் வெளியான படம். இதுதான் விஜயகாந்த்துக்கு 100வது படம். செம மாஸான ஹிட்டானது. இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் திரையரங்கிற்கு இழுத்தது. காரணம் படத்தின் வசனம் மற்றும் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் கதை என்றே சொல்லலாம். படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நச் சென்று நடித்து இருப்பார்.

விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட இப்படத்தில் இரண்டே பாடல்கள் தான். ஆட்டமா...தேரோட்டமா பாடலில் ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி விருந்து படைத்து இருப்பார். இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே சிறப்புத் தோற்றத்தில் வந்து ஆடியிருப்பார். பாசமுள்ள பாண்டியரே என்ற பாடலும் செம ஹிட் ஆனது. 

விஜயகாந்த்துடன் சரத்குமார், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்திருந்தனர். செல்வமணி இயக்கிய இப்படம் விஜயகாந்திற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப்படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகானுக்கு பெரிய வரவேற்பை தந்த படம் இது. 

ஏழைஜாதி

ஏழை மக்களுக்காக எடுக்கப்பட்ட படம் ஏழை ஜாதி. விஜயகாந்த், ஜெயப்பிரதா, மனோரமா, விஜயகுமார் ஆகியோர் நடித்த படம். அரசியல் சாயம் பூசப்பட்ட இந்தப்படத்தின் வசனம் விஜயகாந்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது. இப்படத்தில் விஜயகாந்த் கேரக்டரின் பெயர் சுபாஷ் சந்திர போஸ். இப்படத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் லியாகத் அலிகான். 
ஏழை ஜாதி, அதோ அந்த நதியோரம், இந்த வீடு, கொடுத்தாலும், அன்பே வா ஆகிய பாடல்கள் இளையராஜாவின் இன்னிசையில் உருவானவை. 


வல்லரசு

bdfgd

2000ல் வெளியான இப்படத்தை என்.மகாராஜன் இயக்கினார். எல்.கே.சதீஷ் தயாரிப்பில் தேவா இசை அமைத்தார். விஜயகாந்த், தேவயானி, கரண், கசான்கான், ரகுவரன், ஸ்ரீமன், தலைவாசல் விஜய், அம்பிகா உள்பட பலர் இப்படத்தில் நடித்தனர். 

செக்க செக்க செவந்த, நெஞ்சே நெஞ்சே, அடையார் பீச் ஓரம், ஹலோ மிஸ்டர் நாயுடு, அருப்புக்கோட்டை அக்கா ஆகிய பாடல்கள் உள்ளன. தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. பிரபல இயக்குனர் வாசு இப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். ஜாதி சங்கத் தலைவர் மன்சூர் அலிகானுடன் போலீஸ் அதிகாரி விஜயகாந்த் பேசும் காட்சி படத்தில் செம ஹிட்டானது. 

இன்று பிறந்தநாள் காணும் விஜயகாந்துக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News