×

பழைய பன்னீர் செல்வமா வாங்க விஜயகாந்த்!... ஒரு ரசிகனின் கோரிக்கை...

 
vijayakanth

உங்களுக்கு இந்த இரு கோடுகள் தத்துவம் தெரியுமா?

ஒரு கோட்டை சின்னதை காட்ட பக்கத்துல பெரிய கோட்டை போட்டுடணும். அப்போ அந்த சின்னக்கோட்டை பெரிதாக ஆக்க முயல்வார்கள்...

விஜயகாந்த் நடிக்க வந்த 80களில் பெரிய ஹீரோக்களுக்கு நல்ல புகாரி அசைவத்தோட சாப்பாடு கிடைக்கும். லைட்மேன், டெக்னீஷியன்களுக்கு சாதா சாப்பாடுதான். வாரத்தில் ஒரிரு நாள் அசைவம்னு போட்ட போது, விஜய்காந்த் தன் தயாரிப்பு படங்களுக்கு எல்லோருக்கும் ஒரே வகைக்கான அசைவ சாப்பாடு போட ஆரம்பிச்சதும் மற்ற பெரிய சிறிய கம்பெனிகளெல்லாம் வெட்கப்பட்டு அவங்களும் செய்ய ஆரம்பிச்சாங்க!. இன்னைக்கு திரையுலகில் எல்லோருக்கும் நல்ல சாப்பாடு ஒரே மாதிரி கிடைக்குதுன்னா விஜய்காந்த் போட்ட அந்த பெரிய கோடுதான்.

விஜயகாந்த் பற்றி ஒரு கதை சொல்வார்கள். மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் ‘ஆசை அறுபது நாள்’ அப்படின்னு ஒரு படம் எடுத்தார். அது 100 நாள் மதுரையில் ஓடியது. அப்போ ரஜினி வளர்ந்து வரும் நேரம். அவரை மதுரைக்கு கொண்டு வந்தார் தயாரிப்பாளர். அன்னைக்கு விஜய் நண்பரான தயாரிப்பாளர் ரஜினிக்கு பேச்சுத்துணைக்கு அனுப்பிய ஆள் பெயர் விஜயராஜ்.

vijayakanth

விஜயராஜ் ரஜினியோட சிகரெட் ஸ்டைலை பண்ணிக்காட்ட சொல்லி கேட்க ரஜினியும் செய்து காட்ட தானும் நடிகனாக வர வேண்டும் என தீர்மானிக்கிறார் விஜயராஜ். விஜயராஜ் சான்ஸ்கேட்டு அலையும் போதே தீர்மானிக்கிறார் இனி நாம விஜயகாந்த். ரஜினியோட 'கேள்விக்கென்ன பதில் படத்தில்' ஒரிரு காட்சிகளில் நடித்ததாகவும் அதை எடிட்டிங்கில் தூக்கிட்டதாகவும் சொல்வார்கள். 

இதை ஏன் உறுதியாக சொல்லலைன்னா விஜய்காந்த் கொடுத்த பத்திரிக்கைப்பேட்டியில் வி.கே.ராமசாமி, ஸ்ரீப்ரியா கூட நடித்ததாக சொன்னார். கேள்விக்கென்ன பதில் படத்தில் வி.கே.ஆர் கிடையாது. அதனால் இது உறுதியான செய்தி கிடையாது.

இந்த மதுரைக்காரங்க ராசி பாருங்க. யாரையாவது பார்த்துக்கொள்ளப்போய் சினிமால வந்துடுறாங்க. பாரதிராஜாவை பார்த்துக்கொள்ளப்போன பாண்டியன், ராஜ்கிரணை பார்த்துக்கொள்ளப் போன வடிவேலு, ரஜினியை பார்த்துக்கொள்ளப்போன விஜயகாந்த்....

விஜயகாந்த் ‘இனிக்கும் இளமை’ மூலம் அறிமுகமானாலும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ஹிட்டானாலும் அவரது திரைப்பாதை அவ்வளவு சுலபமானதல்ல. அவரை அறிமுகப்படுத்திய எம்.ஏ.காஜா மீண்டும் விஜயனை வைத்து நிறைய படங்கள் எடுத்தார். ஆனால் விஜயகாந்தை வைத்து எடுக்கவில்லை. ஆனா காஜாவின் நண்பர் ராமநாராயணன் விஜயகாந்தை மடக்கிப்போட்டு 'சிவப்பு மல்லி'ன்னு ஒரு படம் எடுத்தார். 

vijayakanth

சிவப்பு மல்லியில் கோபக்காரனா கண்ணில் தீப்பொறி பறக்க ஒரு போஸ் கொடுத்திருப்பார். தமிழ்நாடு முழுக்க அந்த போஸ்டர் தான்..எரிமலை எப்படி பொறுக்கும் பாடல் தான் அது.

விஜயகாந்த் அன்னைக்கு கோபப்பட்ட அந்த எரிமலை கனல் காட்சிகள் கடைசி வரை அணையவில்லை. அது தான் அவரோட திரை வாழ்வை இந்த நிலைக்கு கொண்டு போனது..

அவரை உச்சத்துக்கும் கொண்டு போய் வைத்தது. விஜயகாந்த் உடல்வாகு ஒரு கிராமத்தானின் உடல்வாகு. லோக்கலா சொல்ல வேண்டும் எனில் ‘நாட்டுக்கட்டை’...ஸ்வப்னான்னு ஒரு நடிகை இருந்தாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு.....'நெஞ்சிலே துணிவிருந்தால்'னு ஒரு படம். அவங்க பாடி லேங்வேஜுக்கு ஏத்த ஒரே நடிகர் நம்ம விஜயகாந்த் தான். 'மதுரை சூரன்'னு ஒரு படத்துல வருவாரு அனுமன் மாதிரி...அப்படித்தான் அனுமனுக்கேத்த வாட்டசாட்டமான உடம்பு...ஈட்டி படத்துல அசல் காட்டுவாசியே தான். 

விஜயகாந்த் அடிச்சா அடி இடி மாதிரி இறங்கும்னா அது சரி தான். நடிகை விஜியுடன் நிறைய படங்கள் ஹிட்டாக காரணம் விஜியோட ஹைட்டுக்கு விஜயகாந்த் பொருத்தம். சாட்சி, வெற்றி, ஈட்டி...

vijayakanth

பிற்காலங்களில் ராதிகாவோட அந்த ஆண்மையான ஸ்டைலுக்கு விஜயகாந்த் தான் பொருத்தம்..அதனால்தான் அந்த ஜோடி மக்களால் ரசிக்கப்பட்டது. அவங்களுக்குள்ளேயும் ஈர்ப்பு இருந்தது.. ராதிகாதான் விஜயகாந்த்தோட ஹேர் ஸ்டைல் இப்போது உள்ள மாதிரி மாற்றியது. 'அம்மன் கோவில் கிழக்காலே' படம் வந்த சமயத்தில்தான் அந்த ஸ்டைலுக்கு மாறினார். காட்சிகளில் ஸ்டைல் மாறி மாறி வரும். அந்த படத்துல ராதிகா கிடையாது. புரிஞ்சுக்கோங்க...

விஜயகாந்த் 'புலன் விசாரணை' முதல் காட்சியிலேயே ஒரு மரத்தை தோளில் தூக்கிட்டு வருவார். அர்னால்ட் செய்த காட்சி அது...அது பக்காவா பொருந்தும். கேப்டன் பிரபாகரன் படத்துல பொன்னம்பலத்துக்கிட்ட மோதுவதற்காக அவர் நடந்து வரும் அந்தக்காட்சி போதும்...அவரோட மாஸ் அப்பீல்..

'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அவர் தாடியெல்லாம் வைத்து ஸாஃப்ட் கேரக்டர் செய்தாலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் அரிவாளோடு நிற்பது கிராமத்து காவல் தெய்வம் மாதிரி...என்ன ஒரு ப்ரசன்ஸ்...

vijayakanth

புலன் விசாரணை படத்துக்கு க்ளைமேக்ஸ் காட்சியில் சட்டையை கழட்டிப் போட்டு மோதும் ஒரு தமிழ் வில்லனை தேடி நடந்தார் செல்வமணி. கடைசியில் கிடைத்தவர் சரத்குமார். சரத்-விஜய் மோதும் போது அவ்வளவு பொருத்தமா இருக்கும். சரத்துக்கும் பெருமையான விஷயம். விஜய்காந்த் என்கிற மலையோடு. சரத்-விஜய்காந்த் க்ளைமாக்ஸ் சண்டை விஜய்காந்துக்கு நியாயம் செய்ததான்னு தெரியல. சரத்துக்கு நியாயம் செய்தது.

அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்த போது அவருக்கெதிராக பலரும் பேசினார்கள். ஆனால் அவர் இல்லாத இந்த அரசியல் சூழலில்தான் அவர் அருமை தெரிகிறது. 

அவர் திரும்பவும் பழைய பன்னீர் செல்வமா வரணும்...அது தான் பெரும்பான்மை மக்களின் ஆசை.

இன்று அவரின் பிறந்தநாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த்...

முகநூலில் இருந்து செல்வன் அன்பு..

From around the web

Trending Videos

Tamilnadu News