sethu
Vijaysethupathi: மகாராஜா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. தனது 50 வது படமான மகாராஜா திரைப்படத்தில் தனது அபார நடிப்பால் அனைவரையும் அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை பெற்ற திரைப்படமாக மகாராஜா திரைப்படம் அமைந்திருந்தது.
இந்த படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதனுக்கு இது இரண்டாவது படம். முதலில் குரங்கு பொம்மை என்ற அற்புதமான படத்தை எடுத்தவர் தான் நித்திலன் சாமிநாதன். ஓடிடியில் மக்கள் அதிகம் பார்த்த திரைப்படமாக மகாராஜா திரைப்படம் தான் அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தின் ஒரு தரமான கம்பேக் கொடுத்த நடிகராக விஜய் சேதுபதி தான் திகழ்கிறார்.
இதையும் படிங்க: ஓடிடியில் மாஸ் காட்டிய ஹார்ட் பீட்… கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே? சோகத்தில் ரசிகர்கள்…
இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி புதியதாக நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் இன்று துவங்கியதாக தெரிகிறது.
இந்த படத்தில் நித்யா மேனனும் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க இருக்கிறார். அதற்காக ஒரு 20 நாட்கள் பரோட்டா போடுவது எப்படி என்பதை முறையாக கற்று அதற்கான பயிற்சிகளை எடுத்தார் விஜய் சேதுபதி.
இதையும் படிங்க: தொடர் தோல்விகளால் துவண்ட லைகா… ரஜினி, அஜீத் செய்த அந்த விஷயம்…!
இந்த நிலையில் படத்திற்குள் நுழையும் போதே விஜய் சேதுபதி ஒரு கண்டிஷனை வைத்து தான் நுழைந்தாராம். இடையில் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு என்னை அழைத்தால் நான் அந்த படத்திற்கு போய் விடுவேன்.
என்னை யாரும் தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதை முடித்துவிட்டு அதன் பிறகு தான் இந்த படத்திற்குள் வருவேன் என்ற கண்டிஷனை போட்டிருக்கிறாராம். அதனால் இந்த புதிய படத்தின் நிலைமை இப்போது வெற்றிமாறன் கையில் இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பட புரமோஷனுக்கு ஏன் மற்ற சமூக இயக்குனர்களை கூப்பிடுகிறீர்கள்?!.. விளாசும் இயக்குனர்!..
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…